Fortune Everyday!!!
- Every day you receive a fortune. Do you know it?
- Early morning the alarm that awakes you from your slumber, towards
the achievement that is awaiting you. You went to sleep with the
confidence that this luck will wake you and you can use it. Isn’t it?
- In 24 hours, you can learn a lot. Execute a lot, gather a lot,
prepare yourself for your future, a chance to experience the present
moment.
- What a wonder? If we think that we wake up daily, it is just a
common day. You will feel bad, if time is not provided for you to write
the exam in your life.
- So, time provides us 24 hours daily to prove ourselves. Every moment
is your action towards the exam. What will happen if we don’t act, even
on knowing the consequences?
- In your youth, if you don’t utilize your days understanding its
purpose, in future it would create a great problem and entangle you in
it.
- But if you take this lucky 24 hours as your investment and act wisely, you can win greatest positions.
- Only if you sow the seeds in time, you can yield in time. Everyday
sow the seeds of hard work and confidence in you. It will yield fortune
throughout your life. Hence, the alarm that awakes you is the call of
FORTUNE. Please don’t neglect it!
தினம் தினம் அதிர்ஷ்டம்
- அன்றாடம் உங்களுக்கு ஒர் அதிர்ஷ்டம் அடிக்கிறது. அது என்ன தெரியுமா?
- அதிகாலையில் உங்களை எழுப்புகிறதே கடிகாரத்தின் அலாரம். அடடா, தூங்கிக்
கொண்டிருந்த நீங்கள் சாதனை நோக்கிய பயணத்திற்காக எழுப்பப்பட்டுள்ளீர்கள்.
நீங்கள் உறங்கச் சென்றதே இந்த அதிர்ஷடம் உங்களை அழைக்கும், அழைத்ததும்
எழுந்து மகிழ்ச்சியுடன் அதனை உபயோகப்படுத்தலாம்.
- ஆஹா! 24 மணி நேரத்தில் எத்தனை விஷயங்களைக் கற்கலாம், எத்தனை
உழைக்கலாம், எவ்வளவு சேகரிக்கலாம், எதிர்காலத்திற்காக ஆயத்தமாகலாம்,
நிகழ்காலத்தில் நஜமாக வாழ ஒரு சந்தர்பம்.
- இதென்ன புதுமை? தினமும்தானே விழிக்கிறோம் என்று சாதாரணமாக நினைத்தால்
அது சாதாரண நாள்தான். வாழ்க்கைப் பாடத்தை நன்கு படித்துத் தயாராக உள்ள
நீங்கள், பரிட்சையில் விடை எழுத அவகாசம் கொடுக்கவல்லையென்றால்
வருத்தப்படுவீர்கள் தானே!
- அதற்காகத்தான் காலம் நமக்கு பரிட்சை எழுத தினமும் 24 மணி நேரத்தைத்
தருகிறது. ஒவ்வொரு மணியிலும் நீங்கள் இயங்குவது தேர்வு எழுதுவதற்கு சமம்.
விடை தெரிந்தாலும் அதன்படி செயல்படாமல் இருந்தால் என்ன ஆகும்?
- விக்ரமாதித்தன் கதையில் வருவது போல்தான் ஆகும். விடை தரிந்தும் கூறாவட்டால் தலை சுக்கு ஙூறாக தெறித்துவிடும் என்று வேதாளம் கூறும்.
- இளமைப் பருவத்தின் ஒவ்வொரு நாளையும் எப்படிப் பயன்படுத்த வேண்டும்
எனத் தெரிந்து முறையாகப் பயன்படுத்தாவிட்டால், எதிர்காலத்தில் ( வேதாளம்
கூறியது போல ) தலைவலியை உண்டாக்கும் அளவுக்கு பிரச்சனைகளின் நடவே சிக்கித்
தவிக்க நேரிடும்.
- அதுவே அதிர்ஷ்டமாகக் கிடைக்கும் ஒவ்வொரு 24 மணி நேரங்களையும் மூலதனமாகக் கொண்டு செயல்பட்டால் சீக்கிரமாகவே சிம்மாசனம் ஏறலாம்.
- ஆடி மாதத்தில் விதைத்தால்தான் தை மாதம் அறுவடை செய்யமுடியும். ஒவ்வொரு
நாளும் உழைப்பையும், நம்பிக்கையையும் விதையுங்கள். அவை எதிர்காலம்
முழுவதும் நற்பலன்களையே தந்து கொண்டிருக்கும். எனவே, அதிகாலையில் அடிக்கும்
அலார அழைப்பு அதிஷ்டத்தின் அழைப்பு, அலட்சியப்படுத்த வேண்டாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக