Oh the Divine
The embodiment of peace!Reverence beyond Religion!We bow to youThough you do not appear before usBe a witness to our deedsBe in the benefits of our tireless effortsWhenever the summer of life shoots –Be our breeze,When the winter of fear attacks –Be our shield,Be the Energy to overcome hurdles,Be the Victory of our dreams,Be my bridge to my fellow beings,Be the guarding spirit of my family,Take me in the Righteous path,Be with me throughout my life,Let me in Righteous path,Be with me throughout my life,Let me be untouched by credentials –and be unshaked by defeats,oh the OmnipresentBe in me too....!
தினசரி பிரார்த்தனை
சமாதானத் திருவுருவாகிய இறைவனே!
சமயங்கள் கடந்த தலைவனே!
உனக்கு வணக்கம்.
என் கண்களுக்கு நீ காட்சி தராவிட்டாலும் பரவாயில்லை,
என் செயல்களுக்கு நீ சாட்சியாய் இரு.
அயராத உழைப்பில் விளையும் பலனாக நீயே இரு.
வாழ்க்கையின் சூடு பொறுக்காதபோது
வருட வருகின்ற தென்றலாய் இரு.
அச்சத்தின் குளிர் அண்டுகிறபோது
போர்த்திக் கொள்கிற போர்வையாய் இரு.
தடைகளைத் தாண்டும் சக்தியாய் இரு.
முயற்சியில் விளைகிற வெற்றியாய் இரு.
எனக்கும், சக உயிர்களுக்கும் பாலமாய் இரு.
எனக்கும், என் குடும்பத்திற்கும் காவலாய் இரு.
சரியான பாதையில் என்னைச் செலுத்து.
வாழ்க்கை மழுவதும் என்னை வழிநடத்து.
வெற்றிகளை செரித்துக் கொள்ள வலிமைகொடு.
தோல்விகளைத் தாங்கிக் கொள்ள பொறுமை கொடு.
எங்கும் இருக்கிற நீ... என்னிலும் இரு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக