ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

New edition of Tamil proverbs for to take new way in your life

1.  ஒவ்வொரு புத்தகமும் நம்மை நமக்கு இனம் காட்டுகிற நல்ல நண்பர்கள்.
நிறைய வாசிக்க, நறைய யோசிக்க உங்கள் வாழ்க்கை மேம்படும்.

learning more and more makes us think more and leads us to greater developments.

2. பரிதாபப்படும் நலையில் இருப்பதைவிட மற்றவர்கள் பொறாமைப்படும்
படியான நிலையில் இருப்பது நல்லது.

 Best is to be admired and envied rather than being pitied.

3.  வாழ்வில் வெற்றிபெற உழைப்பு மட்டும் இருந்தால் போதாது,
நேர்மையும் வேண்டும்.

Success in life needs, not only hard work, but honesty too.

4.  பெரும் பொருப்புகளை ஏற்க முதன்மையாகத் தேவைப்படுவது
நம்பிக்கை.

To achieve greater responsibilities, the foremost quality required is trust.

5. வாழ விரும்பினால் நேரத்தை வீணடிக்க வேண்டாம். ஏனெனில்
வாழ்கை நேரத்தால் ஆனது.

 If you love to live, don’t waste time. life is time.

6. வாழ்வின் பெரிய சாதனைகள் நிகழ வேண்டுமானால் சிறிய செயல்களையும்  நேர்வழில் செய்து முடிப்பவராக நீங்கள் இருக்கவேண்டும்.

 If you desire to achieve great, you must be honest even in petty matters.

7.  நிறைய சம்பாதிப்பதன் முலம் எவரும் பணக்காரர் ஆகிவிட முடியாது. எவ்வளவு மிச்சம் வைத்திருக்கிறாய் என்பதை பொருத்தது அது.

Earning more doesn't make you rich. only how much you save makes you a rich man.

8.  நீங்கள் உழைக்கின்ற நேரம்தான் உங்கள் வாழ்க்கையிலேயே மிகவும்
சந்தோஷமான நேரமாக இருக்க வேண்டும்.

Work time must be your happiest moments in life.

9.  வாழ்க்கை நல்லமுறையில் வாழப் பெற்றதா என்பதை, ஆண்டுகளைக் கொண்டு கணக்கிடாமல் செயல்களைக் கொண்டு கணக்கிட வேண்டும்.

Estimate your life with your deeds, not with the number of years you lived.

10.  பொறுமையும் விடாமுயர்சியும் நம்முடன் இருந்தால் சிரமங்கள்
எனும் மலைகளையும் வென்று விடலாம்.

Hard work and patience could solve mount of problems.

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

Trying Situations...Best Chances...


Trying Situations are the best chances for you to prove your presence of mind and ability to yourself and to the world.

“Critical Situations – are like Tea leaves dropped in boiling water” said someone. Like the essence of the tea leaves in hot water, a man’s leadership qualities and decision making talents would get exposed only during critical situations.

Only those who face the critical situations, can enter the Future. So, these situations bring out your power or fear, what you possess.

Abuse, bad fame, tension, loss of wealth are just time being, which occur during such situations. Those who bear it overcome it. Those who loss the pep to overcome, stay stagnant.

When a problem arise, to think the remedy and clear it, is the ability. If the vibrations of such situations doesn't has any impact in you, you already gain half success.

All are prone to critical situations. To make it good for yourself or make it against you, both are in your hands. They might award you with victory or mark a scar in you. Might prove to be a gift to you or a lesson for you. It might also be the entrance to lead you to the purpose of your life.

Winston Churchill once said,  “A man will reach the purpose of his birth at any second. If he handles the moment properly, he can achieve. Only that moment brings out the power in him”. It is true. Love such situations. Find the solutions. Add your success.

நெருக்கடிகள்... நல்ல வாய்ப்புகள்...

உங்கள் சமயோசிதத்தையும், செயல்திறனையும், உங்களுக்கும், உலகத்திற்கும் நிரூபிக்கக் கிடைக்கும் நல்ல வாய்ப்புகள் தான் நெறுக்கடிகள்.
“நெருக்கடிகள், சுடுநீரில் போடப்பட்ட தேயிலைத்தூள் போல” என்றார் ஓர் அறிஞர். தோயிலையின் உண்மையான நிறம் சுடுநீரில் வெளிவருவது போல், ஒரு மனிதனின் தலைமைப் பண்பும், முடிவெடுக்கும் திறமையும் நெருக்கடியின் போதுதான் வெளிப்படுகிறது.

நெருக்கடிகளை நேர்பட எதிர்கொண்டு வெல்பவர்களே எதிர்காலத்திற்குள் நுழையமுடியும் எனவே, உங்களுக்குள் மறைந்துகிடப்பது பலமா, பயமா என்பது நெருக்கடி நேரத்தில் தான் தெரியும்.

நெருக்கடி ஏற்படுத்தக்கூடிய அவமானம், பழிச்சொல், பதட்டம், பொருளிழப்பு ஆகியவை எல்லாமே தற்காலிக துயரங்கள். அவற்றைத் தாங்கி வருபவர்கள் தாண்டி வருகிறார்கள். தளர்ந்து விடுபவர்கள்  தேங்கி நிற்கிறார்கள்.
ஒரு சிக்கல் ஏற்படும்போது உடனடியாய் என்ன செய்ய வேண்டும் என்று எண்ணிப்பார்த்து செயலில் இறங்குவதே செயல்தறன். நெருக்கடியின் அதிர்வுகள் உங்கள் நெஞ்சத்தை நெருங்கவிடாமல் பார்த்துக் கொண்டாலே பாதி வெற்றி உங்களுக்கு.

நெருக்கடிகள் எல்லோருக்கும் ஏற்படக்கூடியவைதான். அவற்றை உங்களுக்கு சாதகமாக்குவதும், பாதகமாக்குவதும் உங்கள் கையில்தான் இருக்கிறது. அது உங்களுக்கு வெற்றிகளையும் தரலாம், வடுக்களையும் தரலாம். பரிசாகவும் அமையலாம், பாடமாகவும் அமையலாம். உங்கள் வாழ்வின் நோக்கத்துக்கான வாசலாகக்கூட அந்த நெருக்கடியான நேரங்கள் இருக்கலாம்.

வின்ஸ்டன் சர்ச்சில் ஒருமுறை சொன்னார், “ஒரு மனிதன் எதற்காகப் பிறந்தானோ அதற்க்கான விநாடி எல்லோர் வாழ்விலும் வரலாம். அந்த விநாடியை சரியாகக் கைப்பற்றினால் சாதிக்கலாம். அந்த விநாடிதான், தனக்குள் எத்தனை பெரிய சக்தி இருக்கிறது என்பதை அந்த மனிதனுக்கே புலப்படுத்தும்” என்றார் உண்மை தான். நெருக்கடிகளை நேசியங்கள். தாண்டும் வழிகளை யோசியுங்கள். வெற்றிகளை வரவு வையுங்கள்.

Childrens 10 Commandments


“For those who Celebrate Children's day every year. When will you stop celebrating children's day and start celebrating the children” asks the great Tamil poet Abdhul Rahman. To understand the Children's world and their intensions... here are a few words they would like to communicate to us...

1. My hands are very small. If I throw a ball or draw a picture, it will not be upto your expectations. But still you must appreciate me. My legs are too small, walk slowly when you walk with me. I am also coming with you only, isn’t!
2. I have not seen the world as much as you have seen. Allow me to see the world myself and understand it. Don’t put bars for everything.
3. You will have work at home. But I will be a child only for a small period. Spare time to me, to educate me on the details before I grow.
4. My infant heart is very soft. Don’t keep on scolding me. Handle me with gentleness as much as u can.
5. On your request to God, I am the gift to you, isn’t it? Handle me with responsibility. Lead me with patience.
6. I need your appreciation and love to grow and blossom. Encourage me. Point out my mistakes gently.
7. Give me time to understand my mistakes and correct myself. Give time to rectify my small mistakes.
8. I will do certain things though with struggles. Don’t decide that I can’t do it. Don’t compare me with my brothers and sisters or other childrens.
9. Take me to place of prayers and to the places of service.
10.  If you decide to punish me, think twice... think....Don’t use harsh words.


குழந்தைகளின் 10 கட்டளைகள்

“வருடம் தவறாமல் குழந்தைகள் தினம் கொண்டாடுபவர்களே! இனிமேல் தினங்களை விட்டுவிட்டுக் குழந்தைகளை எப்போது கொண்டாடப்போகிறீர்கள்” என்றார் கவிக்கோ அப்துல் ரகுமான்.

குழந்தைகளின் உலகத்தையும் உள்ளத்தையும் நாம் புரிந்துகொள்ள... இதோ... அவர்கள் நமக்கு சொல்ல நினைக்கும் விஷயங்கள்.

1. என் கைகள் சின்னஞ்சிறியவை, நான் பந்து வீசினாலோ, படம் வரைந்தாலோ, நீங்கள் எதிர்பார்க்கும்படி இருக்காது. இருந்தாலும் என்னைப் பாராட்டுங்கள். என் கால்கள் சின்னஞ்சிறியவை, என்னோடு நடக்கும்போது கொஞ்சம் மெதுவாக நடங்கள். நானும் கூட வருகிறேனில்லையா.!

2. நீங்கள் பார்த்த அளவு இந்த உலகை நான் பார்த்ததில்லை. நானாகப் பார்த்துத் தெரிந்து கொள்ள அனுமதியுங்கள். எதற்கெடுத்தாலும் தடைவிதிக்காதீர்கள்.

3. வீட்டுவேலை இருக்கத்தான் செய்யும். ஆனால், நான் குழந்தையாய் இருக்கப்போவது கொஞ்ச காலம்தானே. நான் வளரும் முன் எனக்குச் சொல்ல வேண்டிய விஷயங்களைச் சொல்ல நேரம் ஒதுக்குங்கள்.

4. என் பிஞ்சு மனம் மென்மையானது. என்னைத் திட்டிக்கொண்டே இருக்காதிர்கள். முடிந்த அளவு இதமாக என்னை நடத்துங்கள்.

5. நீங்கள் கேட்டதால் உங்களுக்குக் கடவுள் கொடுத்த பரிசல்லவாநான்! என்னைப் பொறுப்போடு கையாளுங்கள். பொறுமையாக வழிநடத்துங்கள்
.
6. நான் வளர்வதற்கும் மலர்வதற்கும் உங்கள் பாராட்டும் அன்பும் தேவை. எனக்கு ஊக்கம் கொடுங்கள். மென்மையாகத் தவறுகளைச் சுட்டிக்காட்டுங்கள். வலிக்கும் விதமாக விமர்சிக்காதீர்கள்.

7. என் தவறுகளை நானே உணர்ந்து திருத்திக்கொள்ள வாய்ப்புக் கொடுங்கள். சின்னச் சின்னப் பிழைகளை மாற்றிக்கொள்ள நேரம் கொடுங்கள்.

8. சில விஷயங்களை சிரமப்பட்டாவது நானே செய்து கொள்கிறேன். என்னால் முடியாது என்று தீர்மானிக்காதீர்கள். என் சகோதர்களுடனோ பிற குழைந்தைகளுடனோ ஒப்பிட்டு என்னைத் திட்டாதீர்கள்.

9. பிரார்த்தனை செய்கிற இடங்களுக்கும், பிறருக்கு உதவும் இடங்களுக்கும் என்னை அழைத்துச் செல்லுங்கள்.

10. என்னை தண்டிக்க நினைப்பீர்களானால், ஒரு தடவைக்கு இரண்டு தடவை... யோசியுங்கள். கடுமையான வார்த்தைகளை தயவு செய்து சொல்லாதீர்கள்.

Daily Prayers

Oh the Divine
The embodiment of peace!
Reverence beyond Religion!
We bow to you
Though you do not appear before us
Be a witness to our deeds
Be in the benefits of our tireless efforts
Whenever the summer of life shoots –
Be our breeze,
When the winter of fear attacks –
Be our shield,
Be the Energy to overcome hurdles,
Be the Victory of our dreams,
Be my bridge to my fellow beings,
Be the guarding spirit of my family,
Take me in the Righteous path,
Be with me throughout my life,
Let me in Righteous path,
Be with me throughout my life,
Let me be untouched by credentials –
and be unshaked by defeats,
oh the Omnipresent
Be in me too....!

தினசரி பிரார்த்தனை

சமாதானத்  திருவுருவாகிய இறைவனே!
சமயங்கள் கடந்த தலைவனே!
உனக்கு வணக்கம்.
என் கண்களுக்கு நீ காட்சி தராவிட்டாலும் பரவாயில்லை,
என் செயல்களுக்கு நீ சாட்சியாய் இரு.
அயராத உழைப்பில் விளையும் பலனாக நீயே இரு.
வாழ்க்கையின் சூடு பொறுக்காதபோது
வருட வருகின்ற தென்றலாய் இரு.
அச்சத்தின் குளிர் அண்டுகிறபோது
போர்த்திக் கொள்கிற போர்வையாய் இரு.
தடைகளைத் தாண்டும் சக்தியாய் இரு.
முயற்சியில் விளைகிற வெற்றியாய் இரு.
எனக்கும், சக  உயிர்களுக்கும் பாலமாய் இரு.
எனக்கும், என் குடும்பத்திற்கும் காவலாய் இரு.
சரியான பாதையில் என்னைச் செலுத்து.
வாழ்க்கை மழுவதும் என்னை வழிநடத்து.
வெற்றிகளை செரித்துக் கொள்ள வலிமைகொடு.
தோல்விகளைத் தாங்கிக் கொள்ள பொறுமை கொடு.
எங்கும் இருக்கிற நீ... என்னிலும் இரு!

EASIEST?

What things are EASIEST?
  •  To estimate other’s mistakes is easier.
  •  To talk whatever we think is easier.
  •  To hurt those who love us is easier.
  •  To ask forgiveness is easier.
  •  To dream while sleeping is easier.
  •  To be happy in our success is easier.
  •  To fall down is easier.
  •  To celebrate our life is easier.
  •  To promise is easier.
  •  To talk about others is easier.
  •  To err is easier.
  •  To lose friendship is easier.
  •  To think about improvisation is easier.
  •  To blame on others is easier.
  •  To receive from others is easier.

எது சுலபம்?
  •  மற்றவர்களின் தவறுகளை எடைபோடுவது சுலபம்
  •  நினைத்ததையெல்லாம் பேசுவது சுலபம்.
  •  நம்மை நேசிப்பவர்களைக் காயப்படுத்துவது சுலபம்.
  •  மன்னிப்புக் கேட்பது சுலபம்.
  •  தூக்கத்தில் கனவு காண்பது சுலபம்.
  •  வெற்றியில் மகிழ்வது சுலபம்.
  •  தவறி விழுவது சுலபம்.
  •  வாழ்க்கையைக் கொண்டாடுவது சுலபம்.
  •  உறுதிமொழி தருவது சுலபம்.
  •  பிறரை விமர்சிப்பது சுலபம்.
  •  தவறுகள் செய்வது சுலபம்.
  •  நட்பை இழப்பது சுலபம்.
  •  மேம்பாடுபற்றி சிந்திப்பது சுலபம்.
  •  பிறர்மீது பழிபோடுவது சுலபம்.
  •  பிறரிடம் இருந்து பெறுவது சுலபம்.


For Scuceeding successes everyday...

• Arise Early in the Morning
• Take the environment into consideration before starting your work.
• Have your food peacefully, even at circumstance of tensions.
• Spare time for your friends.
• Equip yourself with best talents.
• Select place of peace to visit now and then.
• Praise yourself and others.
• Make friendship with confident people
• Don't get stuck up when you fail, rise and win the situation.
• Analyze the changes that occur in your mind.
• Don't feel guilty when you are in a situation to deny an obligation to someone.
• Take food and rest in tune to your age.
• Regularize your Body exercise, Walking and Meditation.
• Don't compare yourself with others. It either raises your ego or frightens you.
• Never hesitate to correct your mistakes when you realize them.
• Do what you feel is right, without hesitation.
அன்றாட வாழ்க்கையில் அடுக்கடுக்காய் வெற்றிகள் பெற....

- அதிகாலையில் எழுங்கள்.
- பணிக்குப் புறப்படும்முன் உங்கள் சுற்றுப்புறத்தையும் சிறிது பாறுங்கள்.
- எவ்வளவு பதட்டமிருந்தாலும் சாப்பிடும்போது நிதானமாய் இருங்கள்.
- நண்பர்களுக்கு நேரம் கொடுங்கள்.
- உங்களை நீங்களே தகுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
- அவ்வபோது சென்றுவர அமைதியான இடமொன்றைத் தேர்ந்தெடுங்கள்.
- தவறுகளால் தளர்ந்துவிடாதீர்கள். அவற்றைத் தாண்டிச் செல்லுங்கள்.
- உங்கள் மனநிலை எப்படியெல்லாம் மாறுகிறது என்று கண்காணியுங்கள்.
- யாரிடமாவது எதையாவது மறுக்க நேர்ந்தால் குற்ற உணர்வு கொள்ளாதீர்கள்.
- வயதுக்கு தகுந்த உணவும, ஓய்வும் எடுத்துக் கொள்கிறீர்களா என்று பாறுங்கள்.
- உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, தியானம் மேற்கொள்ளுங்கள்.
- உங்களை மற்றவர்களோடு ஒப்பிடாதீர்கள். அது ஆணவத்தைத் தரும். அல்லது அச்சத்தைத் தரும்.
- தவறென்று பட்டால் உங்களை நீங்களே மாற்றிக் கொள்ளத் தயங்காதீர்கள்.
- உங்களுக்கு சரியென்று தீர்மானமாகத் தெரிவதைத் தயங்காமல் செய்யுங்கள்.



Fortune Everyday!!!


  • Every day you receive a fortune. Do you know it?
  • Early morning the alarm that awakes you from your slumber, towards the achievement that is awaiting you. You went to sleep with the confidence that this luck will wake you and you can use it. Isn’t it?
  • In 24 hours, you can learn a lot. Execute a lot,  gather a lot, prepare yourself for your future, a chance to experience the present moment.
  • What a wonder? If we think that we wake up daily, it is just a common day. You will feel bad, if time is not provided for you to write the exam in your life.
  • So, time provides us 24 hours daily to prove ourselves. Every moment is your action towards the exam. What will happen if we don’t act, even on knowing the consequences?
  • In your youth, if you don’t utilize your days understanding its purpose, in future it would create a great problem and entangle you in it.
  • But if you take this lucky 24 hours as your investment and act wisely, you can win greatest positions.
  • Only if you sow the seeds in time, you can yield in time. Everyday sow the seeds of hard work and confidence in you. It will yield fortune throughout your life. Hence, the alarm that awakes you is the call of FORTUNE. Please don’t neglect it!
தினம் தினம் அதிர்ஷ்டம்
  • அன்றாடம் உங்களுக்கு ஒர் அதிர்ஷ்டம் அடிக்கிறது. அது என்ன தெரியுமா?
  • அதிகாலையில் உங்களை எழுப்புகிறதே கடிகாரத்தின் அலாரம். அடடா, தூங்கிக் கொண்டிருந்த நீங்கள் சாதனை நோக்கிய பயணத்திற்காக எழுப்பப்பட்டுள்ளீர்கள். நீங்கள் உறங்கச் சென்றதே இந்த அதிர்ஷடம் உங்களை அழைக்கும், அழைத்ததும் எழுந்து மகிழ்ச்சியுடன் அதனை உபயோகப்படுத்தலாம்.
  • ஆஹா! 24 மணி நேரத்தில் எத்தனை விஷயங்களைக் கற்கலாம், எத்தனை உழைக்கலாம், எவ்வளவு சேகரிக்கலாம், எதிர்காலத்திற்காக ஆயத்தமாகலாம், நிகழ்காலத்தில் நஜமாக வாழ ஒரு சந்தர்பம்.
  • இதென்ன புதுமை? தினமும்தானே விழிக்கிறோம் என்று சாதாரணமாக நினைத்தால் அது சாதாரண நாள்தான். வாழ்க்கைப் பாடத்தை நன்கு படித்துத் தயாராக உள்ள நீங்கள், பரிட்சையில் விடை எழுத அவகாசம் கொடுக்கவல்லையென்றால் வருத்தப்படுவீர்கள் தானே!
  • அதற்காகத்தான் காலம் நமக்கு பரிட்சை எழுத தினமும் 24 மணி நேரத்தைத் தருகிறது. ஒவ்வொரு மணியிலும் நீங்கள் இயங்குவது தேர்வு எழுதுவதற்கு சமம். விடை தெரிந்தாலும் அதன்படி செயல்படாமல் இருந்தால் என்ன ஆகும்?
  • விக்ரமாதித்தன் கதையில் வருவது போல்தான் ஆகும். விடை தரிந்தும் கூறாவட்டால் தலை சுக்கு ஙூறாக தெறித்துவிடும் என்று வேதாளம் கூறும்.
  • இளமைப் பருவத்தின்  ஒவ்வொரு நாளையும் எப்படிப் பயன்படுத்த வேண்டும் எனத் தெரிந்து முறையாகப் பயன்படுத்தாவிட்டால், எதிர்காலத்தில் ( வேதாளம் கூறியது போல ) தலைவலியை உண்டாக்கும் அளவுக்கு பிரச்சனைகளின் நடவே சிக்கித் தவிக்க நேரிடும்.
  • அதுவே அதிர்ஷ்டமாகக் கிடைக்கும் ஒவ்வொரு 24 மணி நேரங்களையும் மூலதனமாகக் கொண்டு செயல்பட்டால் சீக்கிரமாகவே சிம்மாசனம் ஏறலாம்.
  • ஆடி மாதத்தில் விதைத்தால்தான் தை மாதம் அறுவடை செய்யமுடியும். ஒவ்வொரு நாளும் உழைப்பையும், நம்பிக்கையையும் விதையுங்கள். அவை எதிர்காலம் முழுவதும் நற்பலன்களையே தந்து கொண்டிருக்கும். எனவே, அதிகாலையில் அடிக்கும் அலார அழைப்பு அதிஷ்டத்தின் அழைப்பு, அலட்சியப்படுத்த வேண்டாம்.