செவ்வாய், 7 மே, 2013

Tamil Proverbs for to achive success


1. வெற்றியைவிட தோல்விதான் அதிகப் படிப்பினைகளைச்
 சொல்லிக் கொடுக்கிறது.

 Rather than success, failures teach us more.

2. நேரம் என்பது செலுத்தப்பட்ட அம்பைப் போன்றது அது
ஒரு போதும் திரும்பி வராது.

Time is like the arrow shot. it never come back.

3.  பிறரிடம் நூறு குறைகளைக் காண்பதைவிட நம்மிடம் இருக்கும் ஒரு குறையையாவது போக்க முயல வேண்டும்.

Instead of finding hundreds of faults in others. try to correct one fault within you.

4.  சுயநம்பிக்கை இல்லாதவனை யாரும் மதிக்க
மாட்டார்கள்.

No one respects a man without self confidence.

5.  நம்பிக்கையே வாழ்கையின் சக்தி. கவலை வாழ்க்கையின் எதிரி.

Power of life is belief. enemy of life is worry.

6.  காலத்தின் மதிப்பு உங்களுக்குத் தெரியுமா? அப்படியானால் உங்களுக்கு  வாழ்வின் மதிப்பு தெரியும்.

Do you know the value of time? then you will know the value of life.

7.  வாழ்க்கையில் தைரியமாக எதையும் அணுக முடியாதவர்களுக்கு அவர்கள் விரும்பிய எதுவுமே கிடைப்பதில்லை.

One, who has no courage to handle anything in life, cannot achieve anything he wishes.

8.  பிறருடைய தவறுகளுக்காகக் கோபம் கொள்வதற்க்கு முன்,
ஒருவர் தம்முடைய தவறுகளை நினைவில் கொள்ள வேண்டும்.

Before getting angry with others faults, think of your own fault.

9.  முயர்சி கானல்நீர் அல்ல. அது வெற்றி என்கிற
 ஜீவநதிக்கு அழைத்துச் செல்லும்.

Effort is not a mirage. it leads to the elixir of victory.

10.  துன்பங்கள்  நிரந்தரமானவை அல்ல. அவை எப்போதும் பாலத்தின்
அடியில் ஒடுகின்ற தண்ணீரைப் போல ஒடிவிடும்.

Miseries are not stable. they flow away like water under the bridge.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக