ஞாயிறு, 5 மே, 2013

New Tamil proverbs for to gain attitudes

1.  கௌரவத்தை யாரும் கொடுக்க வேண்டியதில்லை. தாமாக வந்து சேருவதே  உண்மையான கௌரவம்.

Respect need not be given by anyone. That which is received by itself is true respect.

2.  விரும்பியதை செய்ய முடியாத சந்தர்பங்களும், வரும்பாததை செய்யவேண்டிய நிர்ப்பந்தங்களும் நிரைந்ததுதான் வாழ்கை.

Life is full of circumstances not allowing us to do what we like and conditions to do what we don’t like.

3.  வாழ்க்கையில் மிகப்பெரிய விஷயங்களே இல்லை.
சிறு சிறு சம்பவங்களாலேயே வாழ்க்கை உருவாகிறது.

 Life doesn't consist of big matters. It consists of small incidents.

4.  சிரமங்களை இரண்டுவிதமாய் எதிர்கொள்ளலாம். சிரமங்களை சரிசெய்வது அல்லது அதை எதிர்கொள்ளும்விதமாய் நம்மை சரிசெய்வது.

Problems can be handled in two ways. To rectify the problems or to adjust our self to face it.

5.  தோல்வியால் கிடைப்பவை இரண்டு. வெற்றிதராதது எது என்பதை அறிவது ஒன்று. எப்படி அணுகலாம் என்று புறியவைப்பது மற்றொன்று.

Loss makes us understand what was not achieved and also the solution how to approach it.

6.  பிறருக்கு ஆலோசனை சொல்வது எளிது.
செயல்படுத்துவதில்தான் வெற்றி அமையும்.

To advice others is very simple. Only when it is practiced success is achieved.

7.  எல்லாத் துறைகளிலும் முக்கை ஙுழைப்பவன், எந்தத் துறையிலும்
ஜொலிக்க முடியாது.

One, who engages in many fields at a time, could shine in none.

8.  இளமையைக் காப்பாற்ற இரண்டு குணங்கள் தேவை. ஒன்று மனமகிழ்ச்சி.
இரண்டாவது மனநிறைவு.

Happiness and satisfaction are the two qualities to sustain youth.

9.  நேரம் ஒரு பெரிய சொத்து. அதை முதலீடு செய்பவர்கள் புத்திசாலிகள். விரையம் செய்பவர்கள் முட்டாள்கள்.

Time is the greatest asset. Brilliant people invest it. Others while it away.

10.  உங்களுக்குள் இருக்கும் ஆற்றல்களை நீங்கள் அறிந்துகொள்ள ஒரே வழி இடைவிடாது முயற்சி செய்து கொண்டிருப்பதுதான்.

The only way to identify the talents in you is to work hard continuously.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக