செவ்வாய், 7 மே, 2013

Tamil proverbs for to find correct path in our life


1.  வெற்றிகளை விட வெற்றிமிகுந்த தோல்விகள் இருக்கின்றன.
அவையே சிறந்தவை.

At times great failures are worth than victory.

2.  பேசப்போவது எல்லாவற்றையும் நன்றாக யோசி. ஆனால், யோசிப்பதை
எல்லாம் பேசி விடாதே.

Think-over whatever you are to talk. But don’t talk everything you thought.

3.  பிறரை நம்பி வாழ்பவருக்கு வறுமை என்றும்
இருந்து கொண்டே இருக்கும்.

Dependents are always in poverty.

4. நம்பிக்கை என்பது அடக்கமானது, ஆழமானது, தெளிவானது, துணிவானது. அதற்கு அவசரமும் இருக்காது, அது ஆரவாரமும் செய்யாது.

Confidence is clam, deep, clear and trustworthy. it neither hastens nor roars.

5. தனக்கென்று அமைத்துக்கொண்ட காரியங்களை இடைவிடாமல் செய்யும் மனிதனிடம்  மகிழ்ச்சியும் மனஅமைதியும் சரணடைகின்றன.

Happiness and contentment succumbs to the one who does his allotted duties continuously.

6.  காலையில் முடிக்கக்கூடிய காரியத்தை மாலைக்கு ஒத்தி வைக்காதீர்கள்.
இல்லாமையைப் பெற்றெடுப்பது சோம்பேறித்தனம்.

Don’t postpone your morning’s work to evening.

7. மகிழ்ச்சி என்பது கடமையச் செய்வதுதான். கடமையிலிருந்துதான்
வெற்றி கிடைக்கும்.

 To do our duty is happiness. victory is the outcome of duty.

8. வாழ்க்கை விலைமிகுந்த ஒரு வாய்ப்பு. ஆனால், அதன் மதிப்போ
வாழ்வோரைப் பொருத்து.

Life is the greatest opportunity. but, its value depends on how one lives.

9. மற்றவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதில் நீங்கள்
முதல் நபராக இருங்கள்.

 Be first to wish others. be the first person to wish others.

10.  பெரிய வெற்றிகள் கிட்டும்போதும், பெரிய தோல்விகள் ஏற்படும்போதும்
அமைதியுடன் செயல்படுங்கள்.

Be calm when you achieve great victories or face big failures.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக