செவ்வாய், 7 மே, 2013

Tamil Proverbs for to realize victory


1.  வெற்றி என்பது குறிக்கோள் அன்று, அது ஒரு பயணமே.
பயணம் தொடர்ந்து கொண்டேதான் இருக்க வேண்டும்.

Success is not an aim. It is a journey! It must be a continuous journey.

2.   நாம் வாழ்வதற்காக ஒத்திப்போடப்படும் நமது பழக்கங்கள்
தான், துன்பங்களுக்கான முதல் காரணம்.

Our habit of postponing in our life makes way to problems.

3.  ஒரு பலத்த சிரிப்பு அடுத்துவரக்கூடிய பயங்கர துன்பத்தையும் சக்தி இழக்கச் செய்து விடுகிறது.

A strong laughter makes the forthcoming grief worthless.

4.  நீங்கள் உங்கள் பலங்களோடு பலவீனங்களையும் ஒப்புக் கொள்ளுங்கள். இதனால் மனநிறைவுடன் கூடிய மகிழ்ச்சி நீடிக்கும்.

Accept your merits and demerits. it will prolong your happiness with satisfaction.


5.  கடப்பதற்குத் தடைகளும் வெல்வதற்குப் போர்களும் இல்லை என்றால் வாழ்க்கை உப்புச் சப்பற்றுப் போய்விடும்.

Life would not be spicy, if there are no hurdles to overcome or wars to win.

6. இன்றைய தினத்தை சவாலாக எடுத்துக்கொள்ளும் போது நேற்றைய தினம் கனவாகவும், நாளைய தினம் நனவாகவும் அமைகிறது.

If today is taken as a challenge, past days are a dream and future turns to become true.

7.  உயர்ந்த இடத்தில் அடைந்த தோல்வி உன்னை வெற்றிக்கு வெகுஅருகே அழைத்துச் செல்லும்.

When you loss at the peak, it would lead you to success very soon.

8. நாளை என்றால் தாமதம் ஆகிவிடும். இன்றே
 வாழ்ந்து விடுங்கள்.

 Tomorrow is too late, live today.

9.  நீங்கள் உழைப்பைப் பயன்படுத்துங்கள். அதிகாரம், பதவி போன்றவை தானாகவே தேடிவரும்.

Work hard, power and status will come to u.

10.   பழக்கத்தை ஆரம்பித்திலேயே எதிர்க்காவிடின் அதுவே
 தவிர்க்க முடியாத ஒன்றாகி விடும்.

Habits if not rectified in the beginning, become unavoidable later.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக