செவ்வாய், 7 மே, 2013

Tamil Proverbs for peaceful life


1.  நீங்கள் அமைதியாக இருந்தால்தான் மற்றவர்களுக்கும் அமைதி கிடைக்கும்படி உங்களால் செயல்பட முடியும்.

Only if you are peaceful, you can make way for others to be in peace.

2.  அறிவைவிடக் கற்பனைதான் புதுமைகளைக் கண்டுபிடிக்க
 பெரிய அளவில் உதவுகிறது.

Imagination helps to invent new things than knowledge.

3. நெருப்பு தங்கத்தைத் துய்மைப்படுத்துகிறது. கஷ்டங்கள் மனிதனை
வலுவுள்ளவனாக மாற்றுகின்றன.

Fire purifies gold. Difficulties make man stronger.

4.  ஒருவருடைய நடத்தைதான் நண்பர்களையோ அல்லது
விரோதிகளையோ உருவாக்குகிறது.

Ones own behavior gathers friends or foe.

5.  வாழ்க்கையில் கஷ்டங்களைக் காணாதவன் தன்னைப் பெரிய மனிதனாக
உயர்த்திக் கொண்டதே கிடையாது.

Without hardships in life, no one can claim himself to be a great man.

6.  கௌரவத்தைப் பெற்றுவிடுவது முக்கியமானது அல்ல. கௌரவத்திற்குத்
தகுதியுள்ளவனாக இருப்பதுதான் முக்கியமானது.

To gain respect is not important. to adhere for the respect is very important.

7.  உலக சரித்திரத்தில் காணப்படும் பெரும் சாதனைகள் அனைத்தும் உற்சாகத்தின் வெற்றிச் சின்னங்களே!

Great achievements noted in the world history are victory signs of great enthusiasm.

8.  எதுவும் எப்போதும் உங்களால் செய்ய முடியும்
என்றே நினையுங்கள்.

Think always that you can do anything.

9.  முயற்சி செய்யாதவனுக்கு கடவுள்கூட
உதவி செய்யமாட்டார்.

God never helps a man without effort.

10.  நம்பிக்கை என்பது, புயல்காற்றில் துவண்டு விழும் மலரல்ல; அது அடி பெயராத இமயத்தைப் போன்றது.

Confidence, is not a slender flower which withers away by storm, it is like unshakable Himalayas


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக