வெள்ளி, 5 ஏப்ரல், 2013

Trying Situations...Best Chances...


Trying Situations are the best chances for you to prove your presence of mind and ability to yourself and to the world.

“Critical Situations – are like Tea leaves dropped in boiling water” said someone. Like the essence of the tea leaves in hot water, a man’s leadership qualities and decision making talents would get exposed only during critical situations.

Only those who face the critical situations, can enter the Future. So, these situations bring out your power or fear, what you possess.

Abuse, bad fame, tension, loss of wealth are just time being, which occur during such situations. Those who bear it overcome it. Those who loss the pep to overcome, stay stagnant.

When a problem arise, to think the remedy and clear it, is the ability. If the vibrations of such situations doesn't has any impact in you, you already gain half success.

All are prone to critical situations. To make it good for yourself or make it against you, both are in your hands. They might award you with victory or mark a scar in you. Might prove to be a gift to you or a lesson for you. It might also be the entrance to lead you to the purpose of your life.

Winston Churchill once said,  “A man will reach the purpose of his birth at any second. If he handles the moment properly, he can achieve. Only that moment brings out the power in him”. It is true. Love such situations. Find the solutions. Add your success.

நெருக்கடிகள்... நல்ல வாய்ப்புகள்...

உங்கள் சமயோசிதத்தையும், செயல்திறனையும், உங்களுக்கும், உலகத்திற்கும் நிரூபிக்கக் கிடைக்கும் நல்ல வாய்ப்புகள் தான் நெறுக்கடிகள்.
“நெருக்கடிகள், சுடுநீரில் போடப்பட்ட தேயிலைத்தூள் போல” என்றார் ஓர் அறிஞர். தோயிலையின் உண்மையான நிறம் சுடுநீரில் வெளிவருவது போல், ஒரு மனிதனின் தலைமைப் பண்பும், முடிவெடுக்கும் திறமையும் நெருக்கடியின் போதுதான் வெளிப்படுகிறது.

நெருக்கடிகளை நேர்பட எதிர்கொண்டு வெல்பவர்களே எதிர்காலத்திற்குள் நுழையமுடியும் எனவே, உங்களுக்குள் மறைந்துகிடப்பது பலமா, பயமா என்பது நெருக்கடி நேரத்தில் தான் தெரியும்.

நெருக்கடி ஏற்படுத்தக்கூடிய அவமானம், பழிச்சொல், பதட்டம், பொருளிழப்பு ஆகியவை எல்லாமே தற்காலிக துயரங்கள். அவற்றைத் தாங்கி வருபவர்கள் தாண்டி வருகிறார்கள். தளர்ந்து விடுபவர்கள்  தேங்கி நிற்கிறார்கள்.
ஒரு சிக்கல் ஏற்படும்போது உடனடியாய் என்ன செய்ய வேண்டும் என்று எண்ணிப்பார்த்து செயலில் இறங்குவதே செயல்தறன். நெருக்கடியின் அதிர்வுகள் உங்கள் நெஞ்சத்தை நெருங்கவிடாமல் பார்த்துக் கொண்டாலே பாதி வெற்றி உங்களுக்கு.

நெருக்கடிகள் எல்லோருக்கும் ஏற்படக்கூடியவைதான். அவற்றை உங்களுக்கு சாதகமாக்குவதும், பாதகமாக்குவதும் உங்கள் கையில்தான் இருக்கிறது. அது உங்களுக்கு வெற்றிகளையும் தரலாம், வடுக்களையும் தரலாம். பரிசாகவும் அமையலாம், பாடமாகவும் அமையலாம். உங்கள் வாழ்வின் நோக்கத்துக்கான வாசலாகக்கூட அந்த நெருக்கடியான நேரங்கள் இருக்கலாம்.

வின்ஸ்டன் சர்ச்சில் ஒருமுறை சொன்னார், “ஒரு மனிதன் எதற்காகப் பிறந்தானோ அதற்க்கான விநாடி எல்லோர் வாழ்விலும் வரலாம். அந்த விநாடியை சரியாகக் கைப்பற்றினால் சாதிக்கலாம். அந்த விநாடிதான், தனக்குள் எத்தனை பெரிய சக்தி இருக்கிறது என்பதை அந்த மனிதனுக்கே புலப்படுத்தும்” என்றார் உண்மை தான். நெருக்கடிகளை நேசியங்கள். தாண்டும் வழிகளை யோசியுங்கள். வெற்றிகளை வரவு வையுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக