வெள்ளி, 5 ஏப்ரல், 2013

Though Discouraged They Dared


We can find many people who proved their talents in many fields, inspite of being discouraged by many. Whenever discouraged, their heart uttered only one inspiring mantra. It was “I CAN DO IT “
The popular sculpturist Augustino Antonio tried to sculpt a sculpture in a Big Marble stone. But in vain. He declared that no one could sculpt a sculpture in this stone. Many famous Italian sculpturists tried. But in vain. Michael Angelo took the Chisel and said “ I can do it”. He tried, and sculpted to his best the sculpture “DAWEED” which became world famous.

Columbus announced that he could find the short route to West Indies. But the experts of Spain commented it was not possible. Columbus said “ i can” and discovered his vision too...

Thomas Alva Edison said to his aspiring friend “ It is impossible to invent a Motor Car” and instead asked his fried to work with him. But his friend continued his effort and succeeded in it. He was Henry Ford.
Birds can fly. But “Thinking of man flying is insane’s idea” was the comments from everybody including his father. But the Right Brothers said “We can”. They succeeded in building aircrafts.

Trust your conscience
Be a Motivating Power for your SELF
U will win even if the world criticises


எல்லோரும் பழித்தாலும் எவ்வாறு ஜெயித்தார்கள்.

பலரது பழிசொற்களையும் தாங்கிகொண்டு பல துறைகளில் வெற்றி பெற்றவர்கள் ஏராளம். எல்லோரும் பழித்தபோது அவர்களின் இதயம் முணுமுணுத்த எழுச்சி மந்திரம் என்ன தெரியுமா? என்னால் முடியும் என்பதுதான்.
இத்தாலியின் புகழ்பெற்ற சிற்பி அகஸ்டினோ அன்டானியோ. ஒரு பெரிய சலவைக் கல்லில் சிற்பம் செதுக்க முயன்றார். முடியவில்லை. இந்தக் கல்லில் எவராலும் சிற்பம் செதுக்க முடியாது என்று நிராகரித்தார்.

புகழ்ப்பெற்ற இத்தாலிய சிற்பிகள் பலரும் முயன்று பார்த்தனர். முடியவில்லை. என்னால் முடியும் என்று உற்சாகத்தோடு உளியை எடுத்தார் மைக்கல் ஆஞ்சலோ. அவரது தலைசிறந்த சிற்பம் தாவீத் அப்படித்தான் உருவாகி உலகப் புகழ் பெற்றது.

மேற்கிந்தியாவுக்கு குறுக்குப் பாதை கண்டுபிடிக்க முடியும் என்ற கொளம்பஸின் கருத்தை ஸ்பெயின் நாட்டு நபுணர்கள் சாத்தியமில்லை என்றார்கள். சிந்தித்ததை சாதித்துக் காட்டினார்.

ஒரு மோட்டார் காரைக் கண்டுபிடிக்கும் முயற்சிக்குப் பதிலாக என்னிடம் வந்து வேலை பாருங்கள். அது சாத்தியமில்லாத விஷயம் என்று தன் நண்பரிடம் சொன்னார் தாமஸ் ஆல்வா எடிசன். அந்த நண்பர் விடாது முயன்றார். என்னால் முடியும் என்றார் அந்த நண்பர். அதை உண்மையாக்கியும் காட்டினார். அவர்தான் ஹென்றிப்போர்டு.
பறப்பது பறவைகளின் வேலை. மனிதர்கள் பறப்பதாவது! இதென்ன பைத்தியக்காரத்தனம் என்று தந்தை உட்பட எல்லோரும் பழித்தார்கள். பத்திரிகைகள் கேலி செய்தன. எங்களால் முடியும் என்றார்கள் ரைட் சகோதரர்கள். அவர்களால் விமானத்தை உருவாக்க முடிந்து.

உங்கள் உள்மனதை நம்புங்கள்.
உங்களுக்கு நீங்களே உந்து சக்தியாய் இருங்கள்.
உலகமே பழித்தாலும் உயர்வீர்கள்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக