வெள்ளி, 5 ஏப்ரல், 2013

Childrens 10 Commandments


“For those who Celebrate Children's day every year. When will you stop celebrating children's day and start celebrating the children” asks the great Tamil poet Abdhul Rahman. To understand the Children's world and their intensions... here are a few words they would like to communicate to us...

1. My hands are very small. If I throw a ball or draw a picture, it will not be upto your expectations. But still you must appreciate me. My legs are too small, walk slowly when you walk with me. I am also coming with you only, isn’t!
2. I have not seen the world as much as you have seen. Allow me to see the world myself and understand it. Don’t put bars for everything.
3. You will have work at home. But I will be a child only for a small period. Spare time to me, to educate me on the details before I grow.
4. My infant heart is very soft. Don’t keep on scolding me. Handle me with gentleness as much as u can.
5. On your request to God, I am the gift to you, isn’t it? Handle me with responsibility. Lead me with patience.
6. I need your appreciation and love to grow and blossom. Encourage me. Point out my mistakes gently.
7. Give me time to understand my mistakes and correct myself. Give time to rectify my small mistakes.
8. I will do certain things though with struggles. Don’t decide that I can’t do it. Don’t compare me with my brothers and sisters or other childrens.
9. Take me to place of prayers and to the places of service.
10.  If you decide to punish me, think twice... think....Don’t use harsh words.


குழந்தைகளின் 10 கட்டளைகள்

“வருடம் தவறாமல் குழந்தைகள் தினம் கொண்டாடுபவர்களே! இனிமேல் தினங்களை விட்டுவிட்டுக் குழந்தைகளை எப்போது கொண்டாடப்போகிறீர்கள்” என்றார் கவிக்கோ அப்துல் ரகுமான்.

குழந்தைகளின் உலகத்தையும் உள்ளத்தையும் நாம் புரிந்துகொள்ள... இதோ... அவர்கள் நமக்கு சொல்ல நினைக்கும் விஷயங்கள்.

1. என் கைகள் சின்னஞ்சிறியவை, நான் பந்து வீசினாலோ, படம் வரைந்தாலோ, நீங்கள் எதிர்பார்க்கும்படி இருக்காது. இருந்தாலும் என்னைப் பாராட்டுங்கள். என் கால்கள் சின்னஞ்சிறியவை, என்னோடு நடக்கும்போது கொஞ்சம் மெதுவாக நடங்கள். நானும் கூட வருகிறேனில்லையா.!

2. நீங்கள் பார்த்த அளவு இந்த உலகை நான் பார்த்ததில்லை. நானாகப் பார்த்துத் தெரிந்து கொள்ள அனுமதியுங்கள். எதற்கெடுத்தாலும் தடைவிதிக்காதீர்கள்.

3. வீட்டுவேலை இருக்கத்தான் செய்யும். ஆனால், நான் குழந்தையாய் இருக்கப்போவது கொஞ்ச காலம்தானே. நான் வளரும் முன் எனக்குச் சொல்ல வேண்டிய விஷயங்களைச் சொல்ல நேரம் ஒதுக்குங்கள்.

4. என் பிஞ்சு மனம் மென்மையானது. என்னைத் திட்டிக்கொண்டே இருக்காதிர்கள். முடிந்த அளவு இதமாக என்னை நடத்துங்கள்.

5. நீங்கள் கேட்டதால் உங்களுக்குக் கடவுள் கொடுத்த பரிசல்லவாநான்! என்னைப் பொறுப்போடு கையாளுங்கள். பொறுமையாக வழிநடத்துங்கள்
.
6. நான் வளர்வதற்கும் மலர்வதற்கும் உங்கள் பாராட்டும் அன்பும் தேவை. எனக்கு ஊக்கம் கொடுங்கள். மென்மையாகத் தவறுகளைச் சுட்டிக்காட்டுங்கள். வலிக்கும் விதமாக விமர்சிக்காதீர்கள்.

7. என் தவறுகளை நானே உணர்ந்து திருத்திக்கொள்ள வாய்ப்புக் கொடுங்கள். சின்னச் சின்னப் பிழைகளை மாற்றிக்கொள்ள நேரம் கொடுங்கள்.

8. சில விஷயங்களை சிரமப்பட்டாவது நானே செய்து கொள்கிறேன். என்னால் முடியாது என்று தீர்மானிக்காதீர்கள். என் சகோதர்களுடனோ பிற குழைந்தைகளுடனோ ஒப்பிட்டு என்னைத் திட்டாதீர்கள்.

9. பிரார்த்தனை செய்கிற இடங்களுக்கும், பிறருக்கு உதவும் இடங்களுக்கும் என்னை அழைத்துச் செல்லுங்கள்.

10. என்னை தண்டிக்க நினைப்பீர்களானால், ஒரு தடவைக்கு இரண்டு தடவை... யோசியுங்கள். கடுமையான வார்த்தைகளை தயவு செய்து சொல்லாதீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக