செவ்வாய், 7 மே, 2013

Confidence making Tamil Proverbs


1.    உன்னைத் தாழ்த்திப் பேசும்போது நீ அடக்கமாய் இருத்தல்
 பெரிய சாதனையாகும்.

When you are degraded, to be calm is a victory.

2.    நம்பிக்கையே வாழ்க்கை. நம்பிக்கை இல்லாத இதயம்
மூளைக்குக் கூட மோசம் செய்யும்

 Belief is life. A heart without belief will spoil even the brain.

3.  பிறருடைய குறைகளை நாம் சுட்டிக்காட்டும்போது நம்முடைய குறைகளை உலகம் அறிய ஆரம்பிக்கிறது.

When we point out other’s faults, world begins to notice our faults.

4.    பிறர் எதைச் செய்ய வேண்டும் என்று நீ விரும்புகிறாயோ அதேபோல்
நீயும் பிறரிடம் நடந்து கொள்.

How u expects others to behave to you similarly you behave to them in the same way.


5.  நாம் செய்ய வேண்டிய காரியங்களைத் தவறாமல் செய்துவந்தால் நமக்குச் சேர வேண்டியவை தாமாக வந்து சேரும்.

If we do our duties without fail, we will receive automatically what we owe.

6.  உழைப்பது சன்மானம் பெறுவதற்கு என்று நினைத்தால்
அந்த உழைப்பு கடினமாய்த் தோன்றும்.

If we work just for earning, the work will be very difficult.


7.  உன் அச்சத்தை உன்னுடன் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால்
ஊக்கத்தை மட்டும் பிறருடன் பகிர்ந்து கொள்.

Keep your fears with yourself. But share your excitements with others.

8.  புத்திசாலிகளிடம் கேட்பதைவிட அனுபவம் நிறைந்தவர்களிடம் ஆலோசனை கேளுங்கள், அதிக பலன் கிடைக்கும்.

Rather than asking advice from brilliant people, get it from experienced men, it fetches good result.


9.  பயன்தரும் பெரிய மரமாக நீங்கள் உங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். முட்புதராக இருந்தால் பிறர் விரும்ப மாட்டார்கள்.

Grow yourself as a tree of benefits. if you are a thorny bush, no one will like you.

10.  செய்யுங்கள் அல்லது செய்யாமலிருங்கள்! வெறுமனே முயற்சி செய்யப் போவதாகச் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

Execute or be still! Don’t just announce that you will take efforts.

The truth aspects supporting Tamil Proverbs


1.  என்ன பேசுவது என்று தயக்கம் தோன்றும் போது
உண்மையைப் பேசுங்கள்.

When u feels hesitant to speak, speak the truth.

2.  ஒரே சமயத்தில் பல திசைகளில் செல்ல முயற்சி
செய்யாதீர்கள்.

Do not try to travel in many directions simultaneously.

3.  எதை மாற்றமுடியாதோ அதை விரும்பக்
 கற்றுக் கொள்ளுங்கள்.

Learn to love what could not be changed.

4.   எதிர்காலத்திற்கான சிறந்த தயாரிப்பு என்னவென்றால் இப்பொழுது இருக்கின்ற கடமையைச் சிறந்த முறையில் முடித்து வைப்பதுதான்.

 The best preparation for future is to execute the present duties at its best.

5.  சிறப்புக்குரியவர்கள் யார் என்றால் பிறரோடு எளிதில் பழகுவதிலும், நட்புக்
கொள்வதிலும் திறமையுடையவர்களாக இருப்பவர்கள்தான்.

Great people are those who have the talent to mingle and be friendly with others easily.


6.  சுறுசுறுப்புடனும், ஆவர்வத்துடனும் செயல்படுகிறவனுக்குத்தான்
இந்த உலகம் சொந்தம்.

World belongs to the one who lives actively with excitement.

7.  எந்த முயற்சியிலும் முதல் அடி எடுத்து வைப்பதுதான்
 கடினமானது.

Only the first step is difficult in every effort.

8.  உழைப்பு எப்போதும் வீண்போகாது. உழைப்பிற்குத் தகுந்த
பலன் ஒருநாள் கட்டாயம் கிடைக்கும்.

Effort never goes wasted. It will definitely earn the reward one day.

9.  பெற்றோர்களின் வாழ்க்கையென்பது குழந்தைகளின்
 பாடப் புத்தகமாக அமைகிறது.

 Life of the parents becomes the lesson for children.

10.  முன்னேறும் சந்தர்பங்கள் தாங்களாகவே வருவதில்லை. அவை
பெரும்பாலும் உருவாக்கப்படுகின்றன.

Development and opportunity does not come its own way, they are to be created.

Tamil Proverbs for to gain prosperity


1.  எந்த ஒரு துறை சார்ந்த தொழிலை தேர்ந்தெடுத்தாலும், அதில் கடிண
உழைப்பு இருந்தால்தான் வளர்ச்சி கானமுடியும்.

Whatever field you choose, hard work is the only way to develop in it.

2.  முன்னேற்றத்திற்காகச் செய்யப்படும் எந்த முயற்சியும்
ஒரு போதும் வீணாவதில்லை.

Effort for achievement is never a waste.


3.  ஒழுக்கத்தோடு இருங்கள், கவலையற்று இருங்கள்.
அச்சமற்று இருக்கலாம்.

Be chaste and without worries, you can live without fear.

4.  நம்பிக்கை உள்ள இடத்தில்தான் முயற்சி இருக்கும். நம்பிக்கை இல்லாத இடத்தில் முயற்சியும் இருக்கமுடியாது.

Trust dwells only in the place of effort, effort does not dwell where trust is not present.

5.  துன்பம் வரும்போது புன்முறுவலுடன் ஏற்றுக் கொள்ளுங்கள். அந்தத் துன்பத்தை ஏற்றுக் கொள்வதற்கு அதைவிடச் சிறந்தவழி எதுவும் இல்லை.

Accept with a smile when grief strikes, it is the only best way to accept it

6.  உன்னால் எதைச் செய்யமுடியாது என்று மற்றவர்கள் சொன்னார்களோ
 அதையே நீ செய்துகாட்டு.

Do what others have declared that can’t be done by you.

7.  இன்பம் வரும்போது அதைபற்றி சிந்தனை செய்யாதே. போகும்போது
சிந்தித்து தக்கவைத்துக் கொள்ளலாம்.

Need not think about happiness when it is attained. Think about it and sustain it, when it is about to go away from you.


8.  ஒழுக்கம் போர்களம் போன்றது ஒயாமல் போராடிக் கொண்டே இருக்க வேண்டும்.

To be disciplined is a tug of war. U must keep on fighting to withstand in it.


9.  உழைப்பு வறுமையை மட்டும் விரட்டுவதில்லை. தீமையையும்  சேர்த்து விரட்டுகிறது.

Hard work drives away not only poverty, but even sorrows.

10.  விளையாட்டுப் போட்டியில்கூட கஷ்டப்பட்டால்தான் வெற்றிகிட்டும். வெற்றியின் அருமை கஷ்டபடுவதில்தான் தெரியும்.

Even in games, we can win only if we struggle. Fruit of victory can be known only if we struggle to achieve it.

Tamil Proverbs for to realize victory


1.  வெற்றி என்பது குறிக்கோள் அன்று, அது ஒரு பயணமே.
பயணம் தொடர்ந்து கொண்டேதான் இருக்க வேண்டும்.

Success is not an aim. It is a journey! It must be a continuous journey.

2.   நாம் வாழ்வதற்காக ஒத்திப்போடப்படும் நமது பழக்கங்கள்
தான், துன்பங்களுக்கான முதல் காரணம்.

Our habit of postponing in our life makes way to problems.

3.  ஒரு பலத்த சிரிப்பு அடுத்துவரக்கூடிய பயங்கர துன்பத்தையும் சக்தி இழக்கச் செய்து விடுகிறது.

A strong laughter makes the forthcoming grief worthless.

4.  நீங்கள் உங்கள் பலங்களோடு பலவீனங்களையும் ஒப்புக் கொள்ளுங்கள். இதனால் மனநிறைவுடன் கூடிய மகிழ்ச்சி நீடிக்கும்.

Accept your merits and demerits. it will prolong your happiness with satisfaction.


5.  கடப்பதற்குத் தடைகளும் வெல்வதற்குப் போர்களும் இல்லை என்றால் வாழ்க்கை உப்புச் சப்பற்றுப் போய்விடும்.

Life would not be spicy, if there are no hurdles to overcome or wars to win.

6. இன்றைய தினத்தை சவாலாக எடுத்துக்கொள்ளும் போது நேற்றைய தினம் கனவாகவும், நாளைய தினம் நனவாகவும் அமைகிறது.

If today is taken as a challenge, past days are a dream and future turns to become true.

7.  உயர்ந்த இடத்தில் அடைந்த தோல்வி உன்னை வெற்றிக்கு வெகுஅருகே அழைத்துச் செல்லும்.

When you loss at the peak, it would lead you to success very soon.

8. நாளை என்றால் தாமதம் ஆகிவிடும். இன்றே
 வாழ்ந்து விடுங்கள்.

 Tomorrow is too late, live today.

9.  நீங்கள் உழைப்பைப் பயன்படுத்துங்கள். அதிகாரம், பதவி போன்றவை தானாகவே தேடிவரும்.

Work hard, power and status will come to u.

10.   பழக்கத்தை ஆரம்பித்திலேயே எதிர்க்காவிடின் அதுவே
 தவிர்க்க முடியாத ஒன்றாகி விடும்.

Habits if not rectified in the beginning, become unavoidable later.

Tamil proverbs that point outs correct way for joyful movements


1.  மகிழ்சி என்பது முடியும் பயணமல்ல தொடரும் பயணம்..

Happiness has no termination; it is a continuous journey…

2.  உங்களை நீங்கள் மதித்தால்தான் இன்னொருவருக்கும்
நம்பிக்கையான பதிலை, பாதுகாப்பைத் தர உறுதிகூற முடியும்.

 Only if respect yourself, you can offer confidential   and safe measures to others.

3.  தூரத்தில் இருக்கும் மகிழ்ச்சியை அடைய முயற்சிப்பவன்  முட்டாள். தன் காலடியிலேயே அதை வளர்த்துக்  கொள்பவன் அறிவாளி.

One, who strives to win the happiness that is far away from him, is a fool. One who creates it within him is a genius.

4.  தான் தோற்றுவிடுவோமோ என்று எவன் ஒருவன் பயந்து நடுங்குகிறானோ, அவன் தோல்வி அடைவது உறுதி.

One who fears that he might lose is sure to lose.

5.  சிறப்பானவற்றை நீங்கள் தொடர்ந்து செய்துகொண்டே இருந்தால், மோசமானவை ஒருபோதும் நிகழாது.

When you continue doing good things, bad never occur.

6.  முன்னேற்றத்தை நோக்கி, அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும்
பரவாயில்லை, அடியெடுத்து வையுங்கள்.

Tread towards enrichment however small it might be.

7.  உங்களுடைய அனுமதி இல்லாமல் உங்களை யாரும்
தாழ்வாக நடத்த முடியாது.

Without your consent none can degrade you

8.  எல்லாத் தொழிலிலும் எல்லையற்ற வாய்புகள் இருக்கின்றன. நம் மனதைத் திறந்தால்தான் அந்த வாய்பின் வாசல்கள் திறக்கும்.

Opportunities are immense in every business. Only when we think about it, the doors of opportunities open.

9.  காலம் நதியைப் போன்றது. உற்பத்தியாகும் இடத்திற்கு
அது திரும்பவே திரும்பாது.

Time is like an ocean. It never returns to its place it starts.

10.  புன்னகை நல்ல ஆயுதம். அது நல்ல கவசமும்கூட.

Smile is a powerful weapon and a good shield (protection) too.  

Hard work importance promoting Tamil Proverbs


1.  உலகம் உறங்கும்போதும் உழைக்கத் தயங்காதவனே
உயர்கிறான்.

One who doesn't hesitate to work even when world rests, he rises.

2.  வெற்றியாளனாக விளங்க விரும்பினால் பழைய வெற்றிப் பாதைகளை விட்டு விலகி புதிய பாதையில் நடைபோடுங்கள்.

If you want to sustain as a winner, move to an unexplored path.

3.  வரக்கூடிய வாய்ப்புகளை உடனடியாக பயன்படுத்துங்கள். இல்லாவிட்டால் எந்த சாகச செயலிலும் வெற்றி பெறமுடியாது.

Utilize the opportunities immediately, If not you can not win any challenge.


4.  ஆர்வம் என்பது பணம், பதவி, செல்வாக்கு அனைத்தையும் முறியடிக்கும் ஆற்றல் கொண்ட உலகின் மிகப்பெரிய சொத்து.

Interest is the world’s greatest wealth, which wins   over wealth, position, status etc.

5.  முழுமையான வெற்றி ஒரே சமயத்தில் கிடைத்துவிடுவதில்லை. அது எப்போதும் பல தவணைகளில் தான் வரும்.

Complete winning cannot be gained at a single stretch. It comes only in installments.

6.  நீங்கள் வெற்றியாளராக வேண்டுமானால் எப்போதும் பிறரோடு உங்களை
ஒப்பிட்டுக் கொண்டேயிருக்கக் கூடாது.

If you want to win, do not compare with others always.

7.  திட்டமிடுதல், தயார்படுத்திக்கொள்ளுதல், கடின உழைப்பு இவற்றிலிருந்தே
வெற்றி பிறக்கிறது. வெற்றிக்கென தனி ரகசியம் கிடையாது.

Success is achieved by planning, preparation and hard work.

8.  நீங்கள் செய்யும் பணிகளை உளமார நேசித்துச் செய்யுங்கள். நீங்கள்
எட்ட வேண்டிய உயரங்களை நிச்சயமாக அடைவீர்கள்.

 Do your duty heartily. You will surely reach the peak.

9.  வாழ்கையில் உங்களுக்கு தகுதியானது கிடைப்பதில்லை. நீங்கள்
எதைக் கேட்கிறீர்களோ அதுவே கிடைக்கிறது.

You don’t receive what you deserve in life. You receive what you ask for.

10.  மனதுக்குள் ஆழ்ந்து நின்று சில நிமிடங்கள் பிரார்த்தனையோ தியானமோ
செய்யுங்கள். அபாரமான தெளிவு பிறக்கும்.

Pray or meditate in peace. Clarity is achieved.

Tamil proverbs for to find correct path in our life


1.  வெற்றிகளை விட வெற்றிமிகுந்த தோல்விகள் இருக்கின்றன.
அவையே சிறந்தவை.

At times great failures are worth than victory.

2.  பேசப்போவது எல்லாவற்றையும் நன்றாக யோசி. ஆனால், யோசிப்பதை
எல்லாம் பேசி விடாதே.

Think-over whatever you are to talk. But don’t talk everything you thought.

3.  பிறரை நம்பி வாழ்பவருக்கு வறுமை என்றும்
இருந்து கொண்டே இருக்கும்.

Dependents are always in poverty.

4. நம்பிக்கை என்பது அடக்கமானது, ஆழமானது, தெளிவானது, துணிவானது. அதற்கு அவசரமும் இருக்காது, அது ஆரவாரமும் செய்யாது.

Confidence is clam, deep, clear and trustworthy. it neither hastens nor roars.

5. தனக்கென்று அமைத்துக்கொண்ட காரியங்களை இடைவிடாமல் செய்யும் மனிதனிடம்  மகிழ்ச்சியும் மனஅமைதியும் சரணடைகின்றன.

Happiness and contentment succumbs to the one who does his allotted duties continuously.

6.  காலையில் முடிக்கக்கூடிய காரியத்தை மாலைக்கு ஒத்தி வைக்காதீர்கள்.
இல்லாமையைப் பெற்றெடுப்பது சோம்பேறித்தனம்.

Don’t postpone your morning’s work to evening.

7. மகிழ்ச்சி என்பது கடமையச் செய்வதுதான். கடமையிலிருந்துதான்
வெற்றி கிடைக்கும்.

 To do our duty is happiness. victory is the outcome of duty.

8. வாழ்க்கை விலைமிகுந்த ஒரு வாய்ப்பு. ஆனால், அதன் மதிப்போ
வாழ்வோரைப் பொருத்து.

Life is the greatest opportunity. but, its value depends on how one lives.

9. மற்றவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதில் நீங்கள்
முதல் நபராக இருங்கள்.

 Be first to wish others. be the first person to wish others.

10.  பெரிய வெற்றிகள் கிட்டும்போதும், பெரிய தோல்விகள் ஏற்படும்போதும்
அமைதியுடன் செயல்படுங்கள்.

Be calm when you achieve great victories or face big failures.

Enthusiasm and ambitions stimulating Tamil Proverbs


1.  தோல்வியே இல்லாமல் இருப்பதற்கு பெயர் வெற்றி அல்ல. விழுந்து விழுந்து எழுந்து கொண்டிருப்பதுதான் வெற்றி.

Avoiding failure alone cannot be claimed as victory. to rise after continuous falls is real victory.

2.  வாக்குறுதி கொடுத்துவிட்டால் கண்டிப்பாக நறைவேற்றுபவர்கள், வாக்குறுதி கொடுக்க போதுமான நேரம் எடுத்து கௌள்வார்கள்.

One who keeps up his promise, takes ample time to promise.

3.  குறித்த காரியங்களை குறித்த நேரத்தில் செய்யக்கூடியவர்கள், மற்றவர்களைவிட பலமடங்கு வேலைகளை அதிகமாகச் செய்யமுடியும்.

One who executes assignments within allotted timings, is capable of achieving more.

  4.  மகிழ்ச்சியோடு இருக்கவேண்டுமானால் எப்போதும் மகிழ்ச்சியான
வார்த்தைகளைப் பேசிக்கொண்டு இரு.

To be happy always talk happier words.

5.  துன்பங்களை வெல்லும் போராட்ட மனமே தேவை. துன்பங்களற்ற
 வாழ்க்கை பயனற்றது.

Courageous heart is able to eliminate problems. life with no struggles has no meaning.

6.  எதற்கும் தயாராக இருப்பவனை நோக்கித்தான் வாய்ப்புகள்
எப்போதும் தேடிவரும்.

Opportunities reach only those who are ready to handle anything.

7.  ஆணவம் முன்னேற்றத்தற்கு தடைக்கல். அடக்கம் மேன்மேலும்
கற்கத் தூண்டும் படிக்கல்.

Ego stands as hurdle for development. modesty encourages to learn more and more.

8.  தயக்கம் காரணமாய் கதவைத் தட்டாத காரணத்தால் எத்தனையோ
வாய்ப்புகளை இழக்க நேரிடுகிறது.

Hesitation makes way to loss of opportunities.

9.  நல்ல ஆலோசனையை விரும்பிக் கேட்பது நம்
திறமையை அதிகப்படுத்தும்.

 Interest in accepting good advice improves our talent.

10.  சிந்தனை சுத்தமாக, உயர்வாக, இருந்தால் சிறிய
விஷயங்களும் பெரியதாக மாறும்.

When our thoughts are pure and high, even petty matter counts great.

Tamil Proverbs for doing good things


1. புகழ் தகுதியில்லாதவனுக்குக் கூட கிடைத்துவிடும். பெருமை
சாதனையாளனுக்கு மட்டும் கிடைக்கும்.

Only achievers get the reputation.

2.  தற்போது இருக்கும் நிலையிலிருந்து, தான் வரும்பும் நிலைக்கு வர
முயற்சி செய்யும்போது எதிர்ப்படும் நிலையான போராட்டம்தான் வாழ்க்கை.

To struggle from the present, to reach a height of one’s liking is life.

3. இன்பத்தின் ரகசியம் நீ விரும்புவதைச் செய்வதன்று;
நீ செய்வதை வரும்புவதுதான்.

Secret of happiness is not doing what you like but to like what u do.

4. கவலையோ, பயமோ இன்றி வாழ்க்கையை நடத்துவதில் அழகு இருக்கிறது. நமது அச்சங்களில் பாதி ஆதாரமற்றவை, மறுபாதி நம்பத்தகாதவை.

Beauty of life lies in leading it without worries or fears.
half our fears are meaningless and the second half is unbelievable.

5.  பெரியதாகச் சிந்தியுங்கள்; உயர்வாகச் சிந்தியுங்கள். இதுவே பெரிய திட்டங்களை வெற்றிகரமாக உருவாக்க உங்களைத் தயார்படுத்தி உயர்த்தும்.

Think big. Think great. it prepares you to succeed in planning great.

6.  மேதைத் தனத்தின் தாயே உழைப்புதான். உழைப்பவன் படிக்காதவனாக இருந்தாலும்ககூட அவன் பெரிய அறஞ்ஞன் ஆவான்.

Hard work yields knowledge. Even an illiterate who works hard become a great man.

7.  வாழ்வில் எவ்வளவோ துன்பங்கள் இருந்தாலும், மனிதனுடைய வற்றாத ஆசைகள்தான் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன.

Through life has lots of struggles, a man’s unlimited wishes motivates him to live.

8.  வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு
சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

Life is an art which attains perfection with very few information's.

9.  சரியானது என்று உணர்ந்தபிறகும் அதைச் செய்யாமல்
 இருப்பதுதான் மகாக் கோழைத்தனம்.

Even after knowing it is right, hesitating to do is cowardice.

10.  உங்களை நீங்களே மதித்துக்கொள்வதுதான் ஆணவம்.
பிறர் உங்களை மதிப்பது பெருமை.

To respect yourself is ego. Others respecting you is esteem.

Tamil Proverbs for peaceful life


1.  நீங்கள் அமைதியாக இருந்தால்தான் மற்றவர்களுக்கும் அமைதி கிடைக்கும்படி உங்களால் செயல்பட முடியும்.

Only if you are peaceful, you can make way for others to be in peace.

2.  அறிவைவிடக் கற்பனைதான் புதுமைகளைக் கண்டுபிடிக்க
 பெரிய அளவில் உதவுகிறது.

Imagination helps to invent new things than knowledge.

3. நெருப்பு தங்கத்தைத் துய்மைப்படுத்துகிறது. கஷ்டங்கள் மனிதனை
வலுவுள்ளவனாக மாற்றுகின்றன.

Fire purifies gold. Difficulties make man stronger.

4.  ஒருவருடைய நடத்தைதான் நண்பர்களையோ அல்லது
விரோதிகளையோ உருவாக்குகிறது.

Ones own behavior gathers friends or foe.

5.  வாழ்க்கையில் கஷ்டங்களைக் காணாதவன் தன்னைப் பெரிய மனிதனாக
உயர்த்திக் கொண்டதே கிடையாது.

Without hardships in life, no one can claim himself to be a great man.

6.  கௌரவத்தைப் பெற்றுவிடுவது முக்கியமானது அல்ல. கௌரவத்திற்குத்
தகுதியுள்ளவனாக இருப்பதுதான் முக்கியமானது.

To gain respect is not important. to adhere for the respect is very important.

7.  உலக சரித்திரத்தில் காணப்படும் பெரும் சாதனைகள் அனைத்தும் உற்சாகத்தின் வெற்றிச் சின்னங்களே!

Great achievements noted in the world history are victory signs of great enthusiasm.

8.  எதுவும் எப்போதும் உங்களால் செய்ய முடியும்
என்றே நினையுங்கள்.

Think always that you can do anything.

9.  முயற்சி செய்யாதவனுக்கு கடவுள்கூட
உதவி செய்யமாட்டார்.

God never helps a man without effort.

10.  நம்பிக்கை என்பது, புயல்காற்றில் துவண்டு விழும் மலரல்ல; அது அடி பெயராத இமயத்தைப் போன்றது.

Confidence, is not a slender flower which withers away by storm, it is like unshakable Himalayas


Tamil Proverbs for to gain Happiness


 1.  நமக்கு வரும் துன்பம், துயரம் எல்லாமே
பலவீனத்திலிருந்துதான் வருகிறது.

Our problems and worries come out of our weakness.

2.  செல்வத்தினால் வரும் புகழ் நிலைப்பதில்லை. சாதனையினால்
வரும் புகழுக்கு எதுவும் ஈடாகாது.

Respect earned by our achievements cannot be replaced.

3.  கோபம் உண்டாவதும் ஒரு சொல்லாலே;
அன்பு பெருகுவதும் ஒரு சொல்லாலே;

Anger sprouts from a word. Love also sprouts from a word.

4.  பேச்சு, காலத்தைப் போல் ஆழமற்றது. மௌனமோ பிரபஞ்சத்தை
போல் விசாலமானது.

A talk is depth-less like time. Silence is deep like reality.

5.  மற்றொருவனைப் பற்றி உன்னிடம் ஒருவன் வாயைத் திறந்தால், நீ உன்
காதை அடைத்துக் கொள்.

When one talks ill about another person close your ears.

6. கடுமையான உழைப்பைத் தவிர வெற்றிக்கு
வேறு வழியில்லை.

Hard work is the only way to SUCCESS

7.  வெற்றி பெறுவதற்க்கு எந்த துறை சார்ந்த வழியை தேர்ந்தெடுத்தாலும் சரி, அதில் கடின உழைப்பு என்ற ஒரே வழிதான் வெற்றிக்கு அழைத்து செல்லும்.

Whichever field you choose, only hard work leads to success in it.

Tamil Proverbs for to achive success


1. வெற்றியைவிட தோல்விதான் அதிகப் படிப்பினைகளைச்
 சொல்லிக் கொடுக்கிறது.

 Rather than success, failures teach us more.

2. நேரம் என்பது செலுத்தப்பட்ட அம்பைப் போன்றது அது
ஒரு போதும் திரும்பி வராது.

Time is like the arrow shot. it never come back.

3.  பிறரிடம் நூறு குறைகளைக் காண்பதைவிட நம்மிடம் இருக்கும் ஒரு குறையையாவது போக்க முயல வேண்டும்.

Instead of finding hundreds of faults in others. try to correct one fault within you.

4.  சுயநம்பிக்கை இல்லாதவனை யாரும் மதிக்க
மாட்டார்கள்.

No one respects a man without self confidence.

5.  நம்பிக்கையே வாழ்கையின் சக்தி. கவலை வாழ்க்கையின் எதிரி.

Power of life is belief. enemy of life is worry.

6.  காலத்தின் மதிப்பு உங்களுக்குத் தெரியுமா? அப்படியானால் உங்களுக்கு  வாழ்வின் மதிப்பு தெரியும்.

Do you know the value of time? then you will know the value of life.

7.  வாழ்க்கையில் தைரியமாக எதையும் அணுக முடியாதவர்களுக்கு அவர்கள் விரும்பிய எதுவுமே கிடைப்பதில்லை.

One, who has no courage to handle anything in life, cannot achieve anything he wishes.

8.  பிறருடைய தவறுகளுக்காகக் கோபம் கொள்வதற்க்கு முன்,
ஒருவர் தம்முடைய தவறுகளை நினைவில் கொள்ள வேண்டும்.

Before getting angry with others faults, think of your own fault.

9.  முயர்சி கானல்நீர் அல்ல. அது வெற்றி என்கிற
 ஜீவநதிக்கு அழைத்துச் செல்லும்.

Effort is not a mirage. it leads to the elixir of victory.

10.  துன்பங்கள்  நிரந்தரமானவை அல்ல. அவை எப்போதும் பாலத்தின்
அடியில் ஒடுகின்ற தண்ணீரைப் போல ஒடிவிடும்.

Miseries are not stable. they flow away like water under the bridge.


ஞாயிறு, 5 மே, 2013

New Tamil proverbs for to gain attitudes

1.  கௌரவத்தை யாரும் கொடுக்க வேண்டியதில்லை. தாமாக வந்து சேருவதே  உண்மையான கௌரவம்.

Respect need not be given by anyone. That which is received by itself is true respect.

2.  விரும்பியதை செய்ய முடியாத சந்தர்பங்களும், வரும்பாததை செய்யவேண்டிய நிர்ப்பந்தங்களும் நிரைந்ததுதான் வாழ்கை.

Life is full of circumstances not allowing us to do what we like and conditions to do what we don’t like.

3.  வாழ்க்கையில் மிகப்பெரிய விஷயங்களே இல்லை.
சிறு சிறு சம்பவங்களாலேயே வாழ்க்கை உருவாகிறது.

 Life doesn't consist of big matters. It consists of small incidents.

4.  சிரமங்களை இரண்டுவிதமாய் எதிர்கொள்ளலாம். சிரமங்களை சரிசெய்வது அல்லது அதை எதிர்கொள்ளும்விதமாய் நம்மை சரிசெய்வது.

Problems can be handled in two ways. To rectify the problems or to adjust our self to face it.

5.  தோல்வியால் கிடைப்பவை இரண்டு. வெற்றிதராதது எது என்பதை அறிவது ஒன்று. எப்படி அணுகலாம் என்று புறியவைப்பது மற்றொன்று.

Loss makes us understand what was not achieved and also the solution how to approach it.

6.  பிறருக்கு ஆலோசனை சொல்வது எளிது.
செயல்படுத்துவதில்தான் வெற்றி அமையும்.

To advice others is very simple. Only when it is practiced success is achieved.

7.  எல்லாத் துறைகளிலும் முக்கை ஙுழைப்பவன், எந்தத் துறையிலும்
ஜொலிக்க முடியாது.

One, who engages in many fields at a time, could shine in none.

8.  இளமையைக் காப்பாற்ற இரண்டு குணங்கள் தேவை. ஒன்று மனமகிழ்ச்சி.
இரண்டாவது மனநிறைவு.

Happiness and satisfaction are the two qualities to sustain youth.

9.  நேரம் ஒரு பெரிய சொத்து. அதை முதலீடு செய்பவர்கள் புத்திசாலிகள். விரையம் செய்பவர்கள் முட்டாள்கள்.

Time is the greatest asset. Brilliant people invest it. Others while it away.

10.  உங்களுக்குள் இருக்கும் ஆற்றல்களை நீங்கள் அறிந்துகொள்ள ஒரே வழி இடைவிடாது முயற்சி செய்து கொண்டிருப்பதுதான்.

The only way to identify the talents in you is to work hard continuously.