The achievers prove their achievements in whatever field they are in. Their
speed in achieving, hard work, planning everything are common. If we see to
those common criterias, we can find the way to attain success.
When one has the confident that he can reach the peak on just seeing it, he can achieve it. Confidence is the first requirement of achievement. With the nature of the present life, any common can judge the future. Finding the sky hidden in the opportunity, and getting ready to spread the wings with the future vision is the character of the people born to achieve. A single rice grain is so tiny. To paint a picture in it is a very big task. To execute even smaller things with perfection and make is an achievement is out of the achievers hard work. Achievers learn from each of their life's happenings. Reading newspapers, listening to music, admiring flowers, in each of their experiences they gain new thoughts or excitements. To taste the experiences of life is the nature of the achievers. To understand the importance of time, doing any action without postponement will make way to plan our life beautifully. Only a well planned life will lead to achievement. The fiber threads of banana tree, due to its texture helps in garlanding the flowers beautifully. In life people must be like this and gather new relations daily... Those who shed the flowers they hold, will not attain success. To love and to be loved is the nature of the achievers. When an achievement is not attained, and if they probe the reason they are average beings. Those who find others ways to succeed are achievers. Light does not penetrate a room with full of wholesome sacks. People full of excuses will not succeed in their life. An achiever believes that, when one has the talent to achieve success, he also has the right to fail. Petty loses, enhances and sharpens the intension of achieving success. When one window is shut, many doors are opened. One who live life every moment with excitement, achieve. You are also coming to join in that que... isn’t it?!!! சாதனையாளர்கள் செய்வதென்ன? எந்தத் துறையாக இருந்தாலும் சாதனையாளர்கள் சாதித்துக் கொண்டே இருக்கிறார்கள். சாதிக்கும் வேகம், உழைப்பு, திட்டமிடுதல், எல்லாமே பொதுதான். அந்தப் பொதுவான இலக்கணங்களில் சிலவற்றைத் தொகுத்துப் பார்த்தால் நம் துறையில் நாம் சாதிப்பதற்கான வழிகள் ப்ளிச் சென்று புலப்படும். சிகரம் கண்களில் படும்போதே அதைச் சென்று தொடமுடியும் என்ற நம்பிக்கை யாருக்கு வருகிறதோ அவர்களே சாதிக்கிறார்கள். நம்பிக்கை, சாதனையின் முதல் தேவை. நிகழ்காலத்தின் தன்மைகளை வைத்தே எதிர்காலத்தை எடைபோடும் தராசு சராசரி மனிதர்களின் மனப்பான்மை. ஒரு வாய்ப்புக்குள் பொதிந்து கிடைக்கும் வானத்தை அடையாளம் கண்டு, அதில் சிறகு விரிக்கத் தயாராகும் தொலைநோக்கு, சாதிக்கப் பிறந்தவர்களின் அடுத்த அம்சம். அரிசி சின்ன விஷயம். அதிலொரு சித்திரம் தீட்டுவது எவ்வளவு பெரிய விஷயம். சின்ன விஷயங்கள் ஒவ்வொன்றையுமே சிறப்பாகச் செய்து அதனைப் பெரிய விஷயமாக்குவது சாதிப்பவர்களின் சிரத்தையால் வருவது. தங்கள் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்ச்சியிலிருந்தும் சாதனையாளர்கள் எதையாவது கற்றுக் கொள்கிறார்கள். நாளிதழ் படிப்பது, பாட்டுக் கேட்பது, பூக்களை ரசிப்பது, ஒவ்வொன்றில் இருந்தும் புதிய சிந்தனையையோ, புத்துணர்வையோ பெறுகிறார்கள். வாழ்க்கை அள்ளிக் கொடுக்கும் அனுபவங்களை அள்ளிக் குடிப்பது சாதனையாளர்களின் இயல்பு. காலத்தின் அருமையைப் புரிந்துகொள்வதும், தள்ளிப் போடாமல் உடனே செய்வதும் வாழ்க்கையை வெகு அழகாகத் திட்டமிட்டுக் கொள்ள உதவும். திட்டமிட்ட வாழ்க்கையில்தான் சாதனை நிகழும். வாழை நார் வாகாக இருக்குமென்றால், அது பூக்களை நெருக்கமாகக் கட்டக்கட்ட மேலும் அழகாகும். வாழ்க்கையில் மனிதர்கள் வாழை நார்களாக இருந்து தினம்தினம் புதிய உறவுகளைத் தங்களுடன் சேர்த்துக்கொண்டே வர வேண்டும். உள்ள பூக்களையும் உதிர்த்து நிற்க்கும் நார்களாய் வாழ்பவர்கள் வெற்றி பெறுவது கிடையாது. பிறரை நேசிப்பதும் பிறரால் நேசிக்கப்படுவதும் சாதனையாளர்களின் இலக்கணம். ஒரு செயலைச் செய்து முடிக்க முடியாதபோது, அதற்கான காரணங்களைத் தேடுபவர்கள் சாதாரண மனிதர்கள். மாற்று வழிகளைத் தேடுபவர்கள் சாதனை மனிதர்கள். சாக்குமூட்டைகள் நிரம்பிய அறையில் வெளிச்சம் நுழையாது. சாக்குப்போக்குகள் சொல்பவர்கள் வாழ்வில் வெற்றிகள் நிகழாது. வெற்றிபெறும் திறமை இருப்பவர்களுக்குத் தோல்வி அடையும் உரிமம் இருக்கிறது என்பது சாதனையாளர்களின் நம்பிக்கை. சின்னச் சின்னத் தோல்விகள், வெற்றி பெறவேண்டும் என்கிற முனைப்பை மேலும் கூர்மைப்படுத்துகின்றன. ஒரு ஜன்னலைத் திறக்க முடியாதபோது பல பதிய கதவுகள் திறக்கப்படுகின்றன. விநாடிக்கு விநாடி விறுவிறுப்பான வாழ்க்கை வாழ்பவர்கள் சாதிக்கிறார்கள். அந்த வரிசையில் நீங்களும் வருகிறீர்கள்தானே!! |
Reading the Tamil proverbs will energies your mind that can create enthusiasm and inspiration in your heart. A Tamil proverb powers your professional life in a right way and helps you to generate more ideological issues against daily life problems. So read Tamil proverbs and think Tamil proverbs and realize Tamil proverbs. For your easy understanding Tamil proverbs in English way and Tamil proverbs in Tamil way has been given here in this website.
செவ்வாய், 12 மார்ச், 2013
What do achievers do?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக