செவ்வாய், 12 மார்ச், 2013

What do achievers do?

The achievers prove their achievements in whatever field they are in. Their speed in achieving, hard work, planning everything are common. If we see to those common criterias, we can find the way to attain success.

When one has the confident that he can reach the peak on just seeing it, he can achieve it. Confidence is the first requirement of achievement.

With the nature of the present life, any common can judge the future. Finding the sky hidden in the opportunity, and getting ready to spread the wings with the future vision is the character of the people born to achieve.

A single rice grain is so tiny. To paint a picture in it is a very big task. To execute even smaller things with perfection and make is an achievement is out of the achievers hard work.

Achievers learn from each of their life's happenings. Reading newspapers, listening to music, admiring flowers, in each of their experiences they gain new thoughts or excitements. To taste the experiences of life is the nature of the achievers.

To understand the importance of time, doing any action without postponement will make way to plan our life beautifully. Only a well planned life will lead to achievement.

The fiber threads of banana tree, due to its texture helps in garlanding the flowers beautifully. In life people must be like this and gather new relations daily... Those who shed the flowers they hold, will not attain success. To love and to be loved is the nature of the achievers.

When an achievement is not attained, and if they probe the reason they are average beings. Those who find others ways to succeed are achievers. Light does not penetrate a room with full of wholesome sacks. People full of excuses will not succeed in their life.

An achiever believes that, when one has the talent to achieve success, he also has the right to fail. Petty loses, enhances and sharpens the intension of achieving success. When one window is shut, many doors are opened.

One who live life every moment with excitement, achieve. You are also coming to join in that que... isn’t it?!!!

சாதனையாளர்கள் செய்வதென்ன?

எந்தத் துறையாக இருந்தாலும் சாதனையாளர்கள் சாதித்துக் கொண்டே இருக்கிறார்கள். சாதிக்கும் வேகம், உழைப்பு, திட்டமிடுதல், எல்லாமே பொதுதான். அந்தப் பொதுவான இலக்கணங்களில் சிலவற்றைத் தொகுத்துப் பார்த்தால் நம் துறையில் நாம் சாதிப்பதற்கான வழிகள் ப்ளிச் சென்று புலப்படும்.

சிகரம் கண்களில் படும்போதே அதைச் சென்று தொடமுடியும் என்ற நம்பிக்கை யாருக்கு வருகிறதோ அவர்களே சாதிக்கிறார்கள். நம்பிக்கை, சாதனையின் முதல் தேவை.

நிகழ்காலத்தின் தன்மைகளை வைத்தே எதிர்காலத்தை எடைபோடும் தராசு சராசரி மனிதர்களின் மனப்பான்மை. ஒரு வாய்ப்புக்குள் பொதிந்து கிடைக்கும் வானத்தை அடையாளம் கண்டு, அதில் சிறகு விரிக்கத் தயாராகும் தொலைநோக்கு, சாதிக்கப் பிறந்தவர்களின் அடுத்த அம்சம்.

அரிசி சின்ன விஷயம். அதிலொரு சித்திரம் தீட்டுவது எவ்வளவு பெரிய விஷயம். சின்ன விஷயங்கள் ஒவ்வொன்றையுமே சிறப்பாகச் செய்து அதனைப் பெரிய விஷயமாக்குவது சாதிப்பவர்களின் சிரத்தையால் வருவது.
தங்கள் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்ச்சியிலிருந்தும் சாதனையாளர்கள் எதையாவது கற்றுக் கொள்கிறார்கள்.

நாளிதழ் படிப்பது, பாட்டுக் கேட்பது, பூக்களை ரசிப்பது, ஒவ்வொன்றில் இருந்தும் புதிய சிந்தனையையோ, புத்துணர்வையோ பெறுகிறார்கள். வாழ்க்கை அள்ளிக் கொடுக்கும் அனுபவங்களை அள்ளிக் குடிப்பது சாதனையாளர்களின் இயல்பு.
காலத்தின் அருமையைப் புரிந்துகொள்வதும், தள்ளிப் போடாமல் உடனே செய்வதும் வாழ்க்கையை வெகு அழகாகத் திட்டமிட்டுக் கொள்ள உதவும். திட்டமிட்ட வாழ்க்கையில்தான் சாதனை நிகழும்.

வாழை நார் வாகாக இருக்குமென்றால், அது பூக்களை நெருக்கமாகக் கட்டக்கட்ட மேலும் அழகாகும். வாழ்க்கையில் மனிதர்கள் வாழை நார்களாக இருந்து தினம்தினம் புதிய உறவுகளைத் தங்களுடன் சேர்த்துக்கொண்டே வர வேண்டும். உள்ள பூக்களையும் உதிர்த்து நிற்க்கும் நார்களாய் வாழ்பவர்கள் வெற்றி பெறுவது கிடையாது. பிறரை நேசிப்பதும் பிறரால் நேசிக்கப்படுவதும் சாதனையாளர்களின் இலக்கணம்.

ஒரு செயலைச் செய்து முடிக்க முடியாதபோது, அதற்கான காரணங்களைத் தேடுபவர்கள் சாதாரண மனிதர்கள். மாற்று வழிகளைத் தேடுபவர்கள் சாதனை மனிதர்கள். சாக்குமூட்டைகள் நிரம்பிய அறையில் வெளிச்சம் நுழையாது. சாக்குப்போக்குகள் சொல்பவர்கள் வாழ்வில் வெற்றிகள் நிகழாது.

வெற்றிபெறும் திறமை இருப்பவர்களுக்குத் தோல்வி அடையும் உரிமம் இருக்கிறது என்பது சாதனையாளர்களின் நம்பிக்கை. சின்னச் சின்னத் தோல்விகள், வெற்றி பெறவேண்டும் என்கிற முனைப்பை மேலும் கூர்மைப்படுத்துகின்றன. ஒரு ஜன்னலைத் திறக்க முடியாதபோது பல பதிய கதவுகள் திறக்கப்படுகின்றன.

விநாடிக்கு விநாடி விறுவிறுப்பான வாழ்க்கை வாழ்பவர்கள் சாதிக்கிறார்கள். அந்த வரிசையில் நீங்களும் வருகிறீர்கள்தானே!!

What is youth? and what is old-age?


Youth is not a matter of age. It is the minds of feeling.
Those who lose hopes in their goals become old.
Those who keeps their goals alive, happens to be young always...
Confidence, Hard work, strong belief..... these are the identity of youth. If the worlds exciting news reach you, it proves that you are young. If not, it proves that you stand away from the exciting life.....
எது இளமை? எது முதுமை?
இளமை என்பது வயதல்ல. மனநிலை.
தங்கள் இலட்சியங்களைக் கைவிடுபவர்களுக்கே வயதாகிறது. இலட்சியங்கள்களை இளமையாக வைத்திருப்பவர்கள், எப்போதும் இளமையாய் இருக்கிறார்கள்.
நம்பிக்கை, முயற்சி, உறுதி, இவையெல்லாமே இளமையின் அடையாலங்கள், திறந்த உலகின் உற்சாகச் செய்திகள் உங்களை வந்தடைந்தால் நீங்கள் இளமையாய் இருப்பதாய் அர்த்தம். ஒரு செய்தியும் வந்தடையாமல் உள்ளம் மூடியிருந்தால் வாழ்க்கையை விட்டு விலகி நிற்பதாய் அர்த்தம்.

இளமை? வேகமும் விவேகமும் நிறைந்த பசுமரம். இந்த பசுமரம் அனுபவம் என்ற முதிர்ந்த மரத்தில் இருந்து விழுந்த விதைகளின் பிரதிபிம்பங்கள். எனவே இளமை காலத்தை வீணடிக்காமல், அனுபவம் மிக்க அந்த முதிர்ந்த உள்ளங்களில் இருப்பதை பகிர்ந்து கொண்டால் வேகம் கிடைக்கும் செயலில் விவேகம் தெண்படும் அல்லது எதிர்காலத்திர்க்கு உரமாக பயன்படும்.
முதுமை என்பது அன்பும் ஆதரவும் தேடும் திராட்சைக் கொடி! நீய் உண்வீடு எனும் தோட்டத்தில் இடம்கொடுத்து வளர்த்தால், வெயில் எனும் பிறட்சனை சூடு வரும் காலத்தில் முதியவன் என்ற அந்த திராட்சை கொடி திராட்சை கனிகளை காய்க்க தெடங்கிவிடும். நீய் அதன்பலனை உட்க்கொண்டு பிறட்சனை என்ற சூடை தனிக்கலாம்.


10 Steps to make your life a success!


Thomas  Jefferson, a great scholar has charted 10 simple steps to SUCCESS. Do you know them?

1. Don’t postpone your work for tomorrow, which could be done today.
2. Don’t disturb others for what is to be done by you.
3. Don’t spend in advance, depending in the money which will be received in future.
4. Don’t purchase things just because they are cheap.
5. Don’t forget that yourself esteem is greater than hunger or thirst.
6. Eat as less as you can.
7. Don’t forget that, whatever is done with your consent can be done with ease.
8. Don’t imagine bad happenings that never happened and brood over it.
9. Handle every action gently and cautiously.
10.  If you happen to talk while at a anger, count till ten. If you are more anger, count  till 100.

வெற்றிகரமான வாழ்க்கைக்குப் 10 வழிகள்.

தாமஸ் ஜெப்பர்ஸன் என்ற அறிஞர், எல்ல விஷயங்களையும் எளிதாய் வெற்றி மயமாக்க 10 வழிகளைத் தந்திருக்கிறார். அவை என்ன தெரியுமா?

1. இன்றே செய்யக்கூடிய விஷயத்தை நாளைக்கு செய்யலாம் என்று தள்ளிப் போடாதீர்கள்.
2. நீங்களாக செய்யக்கூடிய விஷயத்திற்கு மற்றவர்களைத் தொந்தரவு செய்யாதீர்கள்.
3. பணம்  வரும் முன்பே அந்தப் பணத்தை நம்பி செலவை செய்துவட்டுக் காத்திருக்காதீர்கள்.
4. மலிவான விலையில் கிடைக்கிறது என்பதற்காக தேவையில்லாதா பொருட்களை வாங்காதீர்கள்.
5. பசி, தாகத்தைவிட, சுயமரியாதை மதிப்புமிக்கது என்பதை மறவாதிர்கள்.
6.  எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைவாகச் சாப்பிடுங்கள்.
7. விருப்பப்பட்டு செய்யும்போது எந்தக் காரியமும் எளிது என்பதை மறவாதிர்கள்.
8. எல்லா விஷயங்களையும் மென்மையாகவும், நிதானமாகவும், கையாளுங்கள்.
9. கோபமாயிருக்கும்போது பேச நேர்ந்தால் பத்துவரை எண்ணுங்கள். அதிகக் கோபமாய் இருந்தால் நூறுவரை எண்ணுங்கள்.

Personality developing Tamil Proverbs


1.  மற்றவனைப் பற்றியே பேசிக்கொண்டு இருப்பவனும், எண்ணிக் கொண்டு
இருப்பவனும், எந்தக் காரியத்தையும் செய்யமாட்டான்.

One who talks about another person, and thinks about him never does anything.

2.  உங்கள் பலங்களோடு, பலவீனங்களையும் ஒப்புக் கொள்ளுங்கள். இதனால்
 மனநிறைவுடன் கூடிய மகிழ்ச்சி நீடிக்கும்.

 Accept your weaknesses along with your talents it will give happiness with contentment.

3.  அற்பமான ஆசைகளுக்கு இடம் தராதே. உயர்ந்த இலட்சியங்களுக்கே
உன் மனதில் இடம் கொடு.

Don't give way for petty wishes. give place for greater aims in your mind.

4.  மனிதன் வாழ்க்கையைப் புரிந்து கொள்வதைவிட அதனை வாழ்ந்து
பார்ப்பதே சிறந்த முயற்சி.

Man instead of understanding life, the best thing is to live it.

5.  வாழ்க்கையின் ஒவ்வொரு அனுபவத்திலும் பாடம் கற்றுக்
கொள்பவன்தான் புத்திசாலி.

 One who learns from every experience is brilliant.

6.  தவறுகளை ஒப்புக் கொள்ளும் தைரியமும், அதைத் திருத்திக் கொள்வதற்கான பலனும் தான் வெற்றிக்கான வழி.

To accept our mistakes, and to rectify it rewards victory.

7.  தனக்குக் கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பைவிட, தன் உழைப்பின் மதிப்பை உயர்த்திக் காட்டும் மனிதனே சமுகத்தில் முன்னேற முடியும்.

One who values the greatness of Work than its rewards, will reach great heights in the society.

8. வேகமாக முடிவெடுக்கக் கூடாது; ஏனென்றால் வேகமான முடிவுகள்
உறுதியானவை அல்ல.

Don't hasten in your decision because decisions in haste are not strong.

9. சிக்கனமும், சேமிப்பும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்
 இரண்டு கருவிகள்.

 Savings and planning are the two instruments to uplift your life.

10.  நீங்கள் உங்கள் நினைப்புகளை ஒழுங்குபடுத்துங்கள்; உங்கள்
வாழ்க்கை ஒழுங்காகிவிடும்.

Purify your thoughts. Your life will become good.


திங்கள், 11 மார்ச், 2013

New Tamil Proverbs collection with simple format

1.  சாலையாக இருந்தாலூம் வாக்குவாதமாக இருந்தாலூம்
மோதலைத் தவிர்த்திடுங்கள்.

Road or dispute; avoid head on collisions


2.  தோல்வி அச்சத்தை வென்றாலே
வெற்றி தொடங்குகிறது என்று அர்த்தம்.

When lose or fear defeated, it is a sign of victory.

3.  தொடர்ந்து செயல்படுங்கள். செயல் மேன்மை நிகழும்.
குறைகள் தாமாகவே அகலும்.

Be active, execution leads to higher elevation.


4.  ஒன்றைத் தொடங்க நீங்கள் தாமதித்தால்
இன்னொருவர் தொடங்கிவிடுவார்.

If you delay in starting any action, someone else finishes it.

5.  தயக்கத்தின் காரணங்களைப் புரிந்துகொள்ளும்போது
தயக்கம் தவிடுபொடியாகிறது.

When you understand the reasons for hesitation, it disperses.

6.  வாய்புகளின் ஆரம்பம் என்பது முயற்சியின்
ஆரம்பத்தில் இருக்கிறது.

Doors of opportunity are visible only when you start  trying.

7.  பகிர்ந்து கொள்ளப்படாத மகிழ்ச்சி
பாதியிலேயே முடிந்துவிடுகிறது.

Unshared joy ends quickly.


8.  தேடிவரும் வாய்ப்புகளை ஏற்க மறுப்பவன் ஏமாளி.
ஏற்று இழப்பவன் கோமாளி.

One who avoids opportunity that comes to him is fool.
    But one who accepts it and loses is a clown.


9.  நம்மால் எப்போதும் உதவி செய்ய முடியாது.
ஆனால், எப்போதும் இதமாகப் பேச மடியும்.

We can’t help always.
     But can talk kindly always.


10.  உலகின் மிகப்பெரிய சொத்து ஆர்வம்தான். அது பணம், பதவி, செல்வாக்கு அனைத்தையும்முறியடிக்கும் ஆற்றல் கொன்டது.

 World’s biggest fortune is Aspiration. It has the
power to win over Wealth, Position, Status everything.