1. உன்னைத் தாழ்த்திப் பேசும்போது நீ அடக்கமாய் இருத்தல்
பெரிய சாதனையாகும்.
When you are degraded, to be calm is a victory.
2. நம்பிக்கையே வாழ்க்கை. நம்பிக்கை இல்லாத இதயம்
மூளைக்குக் கூட மோசம் செய்யும்
Belief is life. A heart without belief will spoil even the brain.
3. பிறருடைய குறைகளை நாம் சுட்டிக்காட்டும்போது நம்முடைய குறைகளை உலகம் அறிய ஆரம்பிக்கிறது.
When we point out other’s faults, world begins to notice our faults.
4. பிறர் எதைச் செய்ய வேண்டும் என்று நீ விரும்புகிறாயோ அதேபோல்
நீயும் பிறரிடம் நடந்து கொள்.
How u expects others to behave to you similarly you behave to them in the same way.
5. நாம் செய்ய வேண்டிய காரியங்களைத் தவறாமல் செய்துவந்தால் நமக்குச் சேர வேண்டியவை தாமாக வந்து சேரும்.
If we do our duties without fail, we will receive automatically what we owe.
6. உழைப்பது சன்மானம் பெறுவதற்கு என்று நினைத்தால்
அந்த உழைப்பு கடினமாய்த் தோன்றும்.
If we work just for earning, the work will be very difficult.
7. உன் அச்சத்தை உன்னுடன் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால்
ஊக்கத்தை மட்டும் பிறருடன் பகிர்ந்து கொள்.
Keep your fears with yourself. But share your excitements with others.
8. புத்திசாலிகளிடம் கேட்பதைவிட அனுபவம் நிறைந்தவர்களிடம் ஆலோசனை கேளுங்கள், அதிக பலன் கிடைக்கும்.
Rather than asking advice from brilliant people, get it from experienced men, it fetches good result.
9. பயன்தரும் பெரிய மரமாக நீங்கள் உங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். முட்புதராக இருந்தால் பிறர் விரும்ப மாட்டார்கள்.
Grow yourself as a tree of benefits. if you are a thorny bush, no one will like you.
10. செய்யுங்கள் அல்லது செய்யாமலிருங்கள்! வெறுமனே முயற்சி செய்யப் போவதாகச் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.
Execute or be still! Don’t just announce that you will take efforts.